காலம் | - மு. அ. காதர் | சிங்கப்பூர்


Time

தூங்கப் போகிறோம்
நீண்ட காலம்!

எழுந்து வா
தூக்கம் துற
துக்கம் மற

பரிகாசம் போதும்
அவகாசம் அதிகம் இல்லை
இதிகாசம் இயற்று!

காலமாவதற்கு முன்பு
காலம் போவதை கவனி!

ஆத்ம சாந்திக்கு
விதை போடு
பாதச் சுவடுகளை
சிற்பங்கள் ஆக்கு!

வெறும் மூச்சு விட்ட
குற்றம் செய்யாமல்
வாழ்ந்து விட்டு போ!

மறுமை உன்னை
பெருமைப் படுத்த
விட்டுக் கொடு!

பிரதிபலன் எதிர்பாரா
பிரதி எடு
மறதி பழகு!

குறையோடு பேசியது போதும்
இறையோடு பேசு!

தூங்கப் போகிறோம்
நீண்ட காலம்!
எழுந்து வா இப்போது!

- மு. அ. காதர்
சிங்கப்பூர்

Add new comment

8 + 4 =