Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
எதையும் எளிதில் கடந்து போக விடாதீர்! | அருட்தந்தை மரிய அந்தோணி ராஜன் sdc
தன் மகனுக்கு வாழ்வின் முக்கியமான படிப்பினையோடு,விலையுயர்ந்த பரிசு ஒன்றை அளிக்க விரும்பிய தந்தை ஒருவர், விலைமதிப்புமிக்க மோதரத்தினுள் ஒரு ரகசிய சீட்டு எழுதி வைத்து, வாழ்வில் மிக துன்பமான நேரத்தில் மட்டுமே அந்த ரகசிய சீட்டை பிடித்து படிக்க வேண்டுமென்ற அறிவுறுத்தலுடன் அந்த மோதிரத்தை தன் மகனுக்கு பரிசளித்தார். ஒருமுறை அந்த மகனுக்கு தன் வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலையில், தனது தந்தை கொடுத்த பரிசு ஞாபகத்திற்கு வர, அந்த மோதிரத்தை திறந்து, அதில் இருந்த ரகசிய சீட்டை பிரித்துப் பார்த்தார். அதில் “இதுவும் கடந்து போகும்” என்று எழுதி இருந்தது. அவ்வார்த்தைகள் அவருக்கு புதுத்தெம்பூட்டியதோடு, தன் வாழ்வின் பிரச்சினைகளையும் தைரியமாக எதிர்கொள்ளும் உதவியது.அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக தன் வாழ்வின் முன்னேறிய அவர், ஒருநாள் மிக மகிழ்ச்சியான தருணத்திலும், அதே வாசகத்தை எடுத்து படிக்க, இம் மகிழ்ச்சியும் நிரந்தரமல்ல என ஆணவத்தை திருத்திக் கொண்டார்- என ஒரு கதையை நாம் எல்லோரும் கேட்டிருப்போம். ஆனால், “ இதுவும் கடந்து போகும்” என்ற வாசகம் எல்லோருக்கும், எல்லா நேரத்திலும் வாழ்வின் தாரக மந்திரமாக அமைந்துவிடுவது இல்லை.
வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கொண்ட இருபக்க நாணயமே! அப்படியிருக்க,” இதுவும் கடந்து போகும்” என எல்லாவற்றையும் வெறுமென கடந்துவிட்டால் கடைசியில் கிடைப்பது தான் என்ன? “இதுவும் கடந்து போகும்” என இன்று துன்பங்களை கடந்து விட்டால், அதனால் நாளை கிடைக்கப்போகும் இன்பங்களையும், அனுபவங்களையும் கூட நாம் இழக்க நேரிடும்.
- தேர்வின் வழியில்,”இதுவும் கடந்து போகும்” என்ற ஆனால் வெற்றியின் சுவையும் வெற்று என்றுதானே ஆகும்!
- பிரசவ வேதனை,”இதுவும் கடந்து போகும்” என்று ஆகிவிட்டால் குழந்தை பிறந்ததன் இன்பம் சுருங்கிபோய்விடுமே!
- வேலையின் வழியில் ,” இதுவும் கடந்து போகும்” என்று ஆகிவிட்டால் லாபத்தை மனதில் இல்லாமல் போய்விடுமே!
எனவே,” இதுவும் கடந்து போகும்” என நம் வாழ்வின் துன்பங்களையும் இன்பங்களையும் அனுபவிக்க மறந்து, தாண்டி தாண்டி வந்துவிட்டால், வாழ்வின் இறுதியில், நாம் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால், நம் நினைவுகள் எல்லாம் வெறும் தடைகள் ஆகவே தெரியும்.
வாழ்வது ஒருமுறை, எதிர்வரும் பாதைகளை முழுமனதாக எதிர்கொள்வோம். வாழ்வில் எதிர்பாராமல் வரும் திடுக் திருப்பங்களை ரசிக்க பழகுவோம். எனவே, இன்பமோ, துன்பமோ எதையும் எளிதில் கடந்து போக விடாதீர்கள். இவ்விரண்டுமே நமக்கு அனுபவ பாடங்களை! இன்று நாம் கடக்கும் பாதைகள் நமக்கு நாளை வாழ்விற்கான பாடங்கள், நம் வாழ்க்கையில் நாம் சேர்த்து வைக்கும் சுகமான நினைவுகள். எனவே, வாழ்க்கையில் எதையும் அவ்வளவு எளிதில் கடந்து போக விடாதீர்கள்!
அருட்தந்தை மரிய அந்தோணி ராஜன் sdc
உரோம்,இத்தாலி ...
Comments
Super
Super
Add new comment