இழப்பதும் பெறுவதும்!


பண்டமாற்றுமுறை  பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பண்டைய காலம் முதல் இன்று வரை நடந்து கொண்டிருக்கிற ஒரு மிகப்பெரிய வாணிப முறை.  இந்த வருடம் என்னுடைய நிலத்தில் அதிகமாக நெல் நிறைந்து இருக்கிறது, உங்களுடைய நிலத்தில் மிளகாய் அதிகமாக விளைந்து இருக்கிறது என்றால் நான் இரண்டு மூட்டை நெல் தருகிறேன் நீங்கள் எனக்கு தேவையான மிளகாய் தாருங்கள், என அடித்தட்டு மக்களுடைய சமூக பரிமாற்றத்தில் இருந்து,  எங்கள் நாட்டில் அதிகமாக சர்க்கரை உற்பத்தி செய்கிறோம் எனவே  நாங்கள் உங்களுக்கு சர்க்கரை தருகிறோம் நீங்கள் உங்கள் நாட்டில் கிடைக்கும் பெட்ரோலை தருகிறீர்களா என உலக  அளவிலும் கூட நடைபெற்று வருகிற  வாணிப முறைதான் இந்த பண்டமாற்று முறை.

 

1498 மே மாதம் போர்ச்சுக்கல்லிருந்து   வாஸ்கோடகாமா இந்தியாவில் உள்ள கோழிக்கோடு விற்கு வந்து இறங்கினார்.   வளமையானபூமி,   எங்கு பார்த்தாலும் பசுமை.   மிளகு, கடுகு என பலவிதமான விலை உயர்ந்த பொருட்கள் விளைந்து குவிந்து கிடந்தன. அவற்றை கண்ட போது வாஸ்கோடகாமாவிற்கு எப்படியாவது எல்லாவற்றையும் தன்னுடைய நாட்டுக்கு அள்ளிக் கொண்டு போக வேண்டும் என்று கொள்ள ஆசை.

 தன்னோடு வந்திறங்கிய அனைவரையும் கூட்டிக்கொண்டு வாஸ்கோடகாமா அந்தப் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த  அரசனை சந்திப்பதற்காக சென்றார்.  சில மணி நேர காத்திருப்புக்கு பின்   அரசனை சந்திக்கும் வாய்ப்பு  பெற்ற வாஸ்கோடகாமா,  அவரைக் கண்டவுடன் அவரை ஈர்க்கும் நோக்கோடு தன் நாட்டில் இருந்து கொண்டு வந்திருந்த எல்லா பொருட்களையும் எடுத்து அவர் முன்    அடுக்கத் தொடங்கினார். அவர் கொண்டு வந்திருந்த பொருள்களையெல்லாம் எடுத்து வைத்துவிட்டு இவற்றையெல்லாம் நான் உங்களுக்கு தருகிறேன் எனக்கு இங்கு வாணிபம் செய்ய அனுமதி தாருங்கள் என கேட்பது போல சைகை காட்டினார்.  அவற்றை புரிந்து கொண்ட அரசரும் அவரைச் சுற்றியிருந்த அமைச்சர்களும்  உடனடியாக  சிரித்து  விட்டார்கள்.  ஏனெனில் வாஸ்கோடகாமா கொண்டுவந்த பொருட்களெல்லாம்  தொப்பிகள், உடைகள்,  சர்க்கரை,  தேன் போன்ற பொருட்கள்.  இதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது என்பது போன்ற ஏராளமான சிரிப்புதான், அவையில் எழுந்த  சிரிப்பு. 

 கடைசியில்,  தன் ஆசை நிறைவேறாமல் வாஸ்கோடகாமா இந்தியாவை விட்டு வெறுங்கையோடு வெளியேறினார்.  வாஸ்கோடகாமாவின் ஆசை நிறைவேறாமல்  போனதற்கான காரணம் அவர் வேண்டியதை அடைய  அவர்  இழப்பதற்கு   தேவையான,  தகுதியான பொருள் அவரிடம்  இல்லை. ஆனால் அதன்பின் 1499  ஆம் ஆண்டு சரியான தயாரிப்புகளோடு மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்த வாஸ்கோடகாமா இந்திய வாணிப முறைகளில் வெற்றி கண்டார் என்று வரலாற்றில் வாசிக்கிறோம்.

 

 நம் வாழ்வின் இலக்குகளை,  குறிக்கோள்களை அடைய தேவையான,  தகுதியானவற்றை சேர்த்து வைத்திருக்கிறோமா?  இழக்கத் தயாராக இருக்கிறோமா? 

நம் குறிக்கோளை நாம் அடைய நம்மில் சிலவற்றை இறக்கத்தான் வேண்டும் அதேவேளையில்,  மற்றவர்களை அவர்களை நோக்கி கூட்டிச்செல்ல   இறப்பு பயன்படுமே ஆனால் அதைவிட மிகப் பெரிய வெற்றி நம் வாழ்வில் வேறொன்றுமில்லை.   நம்மில் இருக்கும் திறமைகளை பிறரின்  வளர்ச்சிக்காக மாற்றிக்கொள்ள முற்படுவோம். 

நம்முடைய இழப்புகள்  பிறருக்கு வெற்றிப் படிக்கட்டுகள் ஆகட்டும்.  

அருட்தந்தை மரிய  அந்தோணி ராஜன் sdc

Add new comment

19 + 1 =