இதனாலதான் குழந்தைகளை எனக்குப் பிடிக்கும்

இதனாலதான் குழந்தைகளை எனக்குப் பிடிக்கும். இவர்கள் பார்வை வாழ்விற்கான பார்வை – நான் நிறைவுள்ளவன்

ரூத் மேக்டொனால்டுவின் தி வலன்டைன் கதை: ஒரு முதல் வகுப்பு படிக்கும் சிறுவனின் பார்வை. வலன்டைன் டே பரிசு கொடுப்பதற்காக தானே ஆர்வமுடன் பரிசுகளைத் தயாரிக்கத்தொடங்கினான். 

தன்னுடைய வகுப்பிலுள்ள 37 சகமாணவர்களுக்கும் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான வேலை. ஆனால் மகிழ்ச்சியோடும் ஆரவாரத்தோடும் செய்தான். அந்த நாள் வந்தது.

பள்ளிக்கு அனுப்பிய தன்னுடைய மகன், வரும்போது மகிழ்ச்சியோடு வரவேண்டும் என்று விரும்பினாள். ஏனென்றால் தன்னுடைய மகன் மிகவும் அமைதியானவன். எளிதாக பழகக்கூடியவன் அல்ல. எனவே அவனுக்கு கொஞ்ச மாணவர்களாவது பரிசு கொடுப்பார்களா என்ற சந்தேகம். தன்னுடைய மகனின் வருகைக்காக ஆவலுடனும், அதே நேரத்தில் பதட்டத்துடனும் காத்திருந்தாள் அந்த தாய்.

தூரத்தில் தன் மகன் வருவதைக்கண்டவள், அவனை எதிர்நோக்கினாள். அவன் கைகளில் ஒரு வளையம், ஒரு மிட்டாய், ஒரு பரிசு. ஒருவேளை யாரும் கொடுக்காத பிள்ளைகளுக்கு ஆசிரியர் கொடுக்கும் பரிசாகத் தான் இருக்கும் என்று நினைத்தாள். தன்னுடைய மகனுடைய முகத்தை ஊற்றுநோக்கினாள். அவன் எந்த நிலையில் இருக்கிறான் என்பதை அவளால் உணரமுடியவில்லை.

அவன் வந்து தன் தாயை கட்டியணைத்துச் சொன்னான். அம்மா, நான் ஒரு பொருளைக்கூட தவறவிடவில்லை, எல்லாவற்றையும் எல்லாருக்கும் கொடுத்துவிட்டேன் என்று மகிழ்ச்சியோடு சொன்னான். அவனுடைய தாய் மெய்சிலிர்த்து நின்றாள். அதுதான் வாழ்விற்கானப் பார்வை. 

Facebook: http://youtube.com/VeritasTamil Twitter: http://twitter.com/VeritasTamil Instagram: http://instagram.com/VeritasTamil SoundCloud: http://soundcloud.com/VeritasTamil Website:https://tamil.rvasia.org **for non-commercial use only**

Add new comment

12 + 5 =