வயது முதிர்ந்தும்...


Boat

வயது முதிர்ந்தும் இளமைத் துடிப்புடன் நம்மிடம் வாழ்பவர்கள் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள். 1952 ஆம் ஆண்டு இமய மலையை ஏறவேண்டும் என்று முயற்சி செய்தவர் கேரளாவைச் சார்ந்த திரு. சித்ரன் நம்பூதிரிபாத் அவர்கள். இவர் இப்பொழுது தனது 99 ஆண்டு பயணத்தில் இருக்கின்றார். இந்த ஆண்டு 29 ஆவது முறையாக இமய மலையை ஏறி சாதனைப் படைத்துள்ளார். 

அடுத்த ஆண்டு அதாவது தனது 100 ஆவது வயதில் 30 வது முறையாக இமய மலைக்கு ஏறிச் செல்வேன் என்பதனை மிகவும் உறுதியுடன் கூறுகின்றார். இன்றும் நல்ல உடல்நிலையுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். நம் மத்தியிலும் இத்தகைய நபர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

நீங்கள் அறிந்தவர்களையும், உங்கள் அனுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

 

Add new comment

8 + 0 =