புதிய சாதனை...


wings

நம்முடைய ஒவ்வொரு புதிய முயற்சியும் பலருக்கு வழிகாட்டி... உங்கள் புதிய சாதனைகளையும், முன்னெடுப்புகளையும் பகிருங்களேன். பூப்பந்தாட்ட போட்டி தொடங்கி 42 ஆண்டுகள் ஆகி, இந்தியாவில் யாரும் உலக சிறந்த சாதனையாளர் (World Badminton Championship) என்ற பட்டத்தை யாராலும் பெறமுடியவில்லையே என்ற நம்முடைய ஏக்கத்திற்கும், குமுறலுக்கும் விடைகொடுத்துவிட்டார் பி. வி. சிந்து அவர்கள். 

சுவிட்சர்லாந்து நாட்டில் பேசல் நகரில் கடந்த ஆகஸ்டு 25 ஆம் தேதி நடைபெற்ற 25 ஆவது உலக சிறந்த பூப்பந்தாட்ட சாதனையாளர் பட்டப் போட்டியில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த நோசோமி ஒகுகாரா என்பவருடன் மோதி வெற்றிப் பெற்றுள்ளார். 

நம்மிலும் இப்படிப்பட்ட இளம் சாதனையாளர்கள் அடையாளம் காணப்படின் அவர்களைப் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள். தயவுசெய்து இந்த செய்தியைப் பகிருங்கள்.
 

Add new comment

11 + 7 =