உங்கள் அம்மா? 


Mother

அம்மா என்றால் அன்பு
அதுதான் அவளின் பண்பு

அம்மா என்றால் ஆலயம்
அதில் நாம் ஒரு அங்கம்

அம்மா என்றால் ஆற்றல்
அதுதான் ஒரு படைப்பு

அம்மா என்றால் இனிமை
அதுதான் அவளின் இன்பம்

அம்மா என்றால் இரக்கம்
அதனால்தான் அவள் ஒருதெய்வம்

அம்மா என்றால் ஈகை
அதுதான் அவளின் பகிர்வு

அம்மா என்றால் உண்மை
அதுதான் அவளின் உயர்வு

அம்மா என்றால் ஊக்கம்
அதுதான் அவளின் ஆக்கம்

அம்மா என்றால் எழுச்சி
அதுதான் அவளின் எண்ணம்

அம்மா என்றால் ஐஸ்வர்யம்
அதனால்தான் அவள் ஒருசீமாட்டி

அம்மா என்றால் ஒற்றுமை
அதுதான் அவளின் பந்ததானம், பாசம்

அம்மா என்றால் ஓடம்
அதனால்தான் அவள் ஒருசுமைதாங்கி

அம்மா என்றால் ஓளவை
அதனால்தான் அவள் கண்கானி

இவர்தான்எங்கள்அம்மா!
உங்கள் அம்மா? 

-திருமதி. மேபல்ராணி
 

Add new comment

10 + 4 =