Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இசைவு தரும் இசை! | Devadas
சோகத்தில் கசிந்துருகி, உள்ளம் பாடும் பாடலைக் கேட்கும் மனமானது ஒருவித சுகம் பெறுகிறது. அந்தச் சுக அனுபவத்தில் மூழ்கி எழும்போதுதான் மனம் புத்துணர்ச்சி அடைகிறது.
உதாரணமாக கேரளத் தம்பதி சில வருடமாகக் குழந்தை இல்லை.. விரக்தி. தற்கொலைக்கான முயற்சி... ஆச்சரியம்... வானொலியில் டி.எம்.எஸ் சுசீலா ஆகியோரின் பாடல் வரிகள் ஒலிக்கிறது. அமைதியான நதியினிலே ஓடும் ஓடம், அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்... உடனே டி.எம்.எஸ் அவர்களைச் சென்று சந்தித்தார்கள். தம்பதியினர் மகிழ்வோடு ஆசி பெற்றார்கள். மேலும் ஆச்சரியம், ஒரு வருடத்தில் அழகான குழந்தை ஒன்று பிறந்தது!
தன்னம்பிக்கை தரும் இசை
சோக நிலையில் கேட்கின்ற சோகப் பாடலானது நமது எண்ண உணர்வினைப் பிரதிபலிப்பதாக அமையும். அதுவே நம் மனத்துக்கு ஆறுதல் தரும் அன்றாடம் இசையோடு ஒன்றி, இசையை ரசித்து மகிழும் ஒரு மனிதனை நோயானது பல வேளை களில் நெருங்குவதே இல்லை . நம் மனப்பிரச் சினையை இன்னொருவரிடம் கூறி ஆறுதல் பெற நினைக்கும்போது, அதுவே எதிர்வினையை ஏற் படுத்திவிடும். அதேவேளையில், இசைய வைக்கும் கட்டுப் பாடுள்ள இனிமையான ஒலியைத் தரும் வானொலி டி.வி. இவைகளை நமது நண்பனாக்கிக் கொண்டால் நம் மனம் குறையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமலேயே நம் மனம் பிரச்சினைகளுக்குத் தீர்வு அளித்து விடுகிறது.
எனவே, நாம் அழுகின்ற நேரம், நமக்காக அழுவது போன்று வானொலியில் ஒரு பாடல் ஒலிக் கும்போது அதில் நம்மை நாம் தேற்றிக்கொள்கிறோம். ஊனையும் உயிரையும் தொட்டு, நரம்பு மண்ட லத்தை மீட்டு குணமாக்கும், இசை உடலில் உள்ள நோய்களை அகற்றி. மனிதனைப் பல ஆண்டுகள் நலமோடு வாழ வைக்கும் என்பதில் ஐயமில்லை .
'சிரிக்கச் சொன்னார், சிரித்தேன்,
பார்க்கச் சொன்னார், பார்த்தேன்.
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி'
.-பெண்ணின் கலக்கம்
ஆக, வாழ்க்கையின் தத்துவமே இசைக்குள்தான் அடங்கி இருக்கிறது. மனிதனின் சகாப்தம் முடியும் போது இசையும் அவனோடு சங்கமித்து விடுகிறது. இசை தனியாகவும், உயிர்கள் தனியாகவும் இயங்குவதில்லை.
ஒன்றையொன்று சார்ந்து நிற்பதுதான் உலக வாழ்வின் உண்மைத் தத்துவம். இசையின் இனி மையைப் போன்று நமது வாழ்வும் இனிமை யானதாக அமைவதற்கு நாமே பொறுப்பாளர்கள்!
எழுத்து - P. தேவதாஸ்
இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,
ஆசிரியர்,
இருக்கிறவர் நாமே
[email protected]
என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
Add new comment