Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
முட்டாள்கள் தினம் | April 1
நாமெல்லாம் பள்ளிப் பருவத்தில் சக நண்பர்களிடம், வீட்டில் உள்ளவர்களிடம் அன்று ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்ட நாட்களை மறக்க முடியாது. அதேபோல ஒருவரையாவது ஏமாற்றி விட வேண்டும் என்ற விளையாட்டுத்தனமும் அதில் இருந்த ஆர்வமும் மறக்க முடியாது. உன் சட்டையிலே என்ன கறி? உன் பின்னே பாம்பு? என்று ஆரம்பித்து பல ஏமாற்றுக் கேள்விகளை நண்பர்களிடம் சொல்லி...ஏமாற்றி விளையாடி இருப்போம்.. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும். ஏமாற்றுவதையும் ஏமாறுவதையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்ளும் ஒரு தினம். உலகம் முழுவதும் பலரைக் குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும் தினம் முட்டாள்கள் தினம் (யுpசடை குழழடள' னுயல ழச யுடட குழழடள' னுயல). இது உலகம் முழுவதும் ஏப்ரல் 1 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும், பிரான்ஸ் நாட்டிலேயே முதன்முதலில் கொண்டாடப்பட்டது என்கிறார்கள்.
16 ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது. 1562 இல் திருத்தந்தை 13ஆம் கிரகரி அவர்கள் ஜூலியன் ஆண்டுக் கணிப்புமுறையை மாற்றி, கிரேகோரியன் ஆண்டுக் கணிப்புமுறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்று புத்தாண்டு ஆரம்பமானது. பின்னர் பிரான்ஸ் 1852 ஆம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660 ஆம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700 ஆம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752 ஆம் ஆண்டிலும் இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை கொண்டாடினர்.
புதிய வழக்கத்தை ஏற்றுக்கொண்டு ஜனவரி முதல் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடிய மக்கள், பழைய வழக்கத்தைப் பின்பற்றி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்தார்கள். இதலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. ஜனவரி 1ஆம் தேதியைப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களுக்கு, மற்றவர்கள் பரிசுக்கூடை போல் செய்து உள்ளே வெறும் காகிதம், குப்பை, குதிரைச்சாணம் போன்றவைகளை நிரப்பி, நம்பும்படியாக அனுப்பி அவர்களை முட்டாள்களாக்கி 'ஏப்ரல் பூல்" என்று சீண்டினார்கள். இத்தகைய கேலிச் சீண்டல்கள் பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து, அமெரிக்காவுக்குப் போய், பிறகு உலகமெங்கும் பரவி ஏப்ரல் 1 என்பது முட்டாள்கள் தினமாக மாறிப்போனது. 1466 ஆம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.
பிரெஞ்சுக் குழந்தைகள்கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது நண்பர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் 'ஏப்ரல் மீன்' என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர். 1986 இல் ப்ரெட் வால்டன் இயக்கிய, 'ஏப்ரல் பூல்ஸ் டே" திரைப்படம் மிகப் பிரபலமானது. டெபோரா போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுன்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாகத் தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீரநடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்.. ஏப்ரல் முதல் தேதி பல வேடிக்கைகள் மட்டுமல்லாது பல வினைகளும் வந்துள்ளன.
Add new comment