Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உலக மனநலிவு நோய் தினம் | March 21
உலக மனநலிவு நோய் (டவுன் சிண்ட்ரோம்) 2006 ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 21 வது குரோமோசோமின் மும்மடங்கின் (ட்ரைசோமி) தனித்துவத்தை குறிக்க தேர்வு மூன்றாம் மாதம் தேர்வுசெய்யப்பட்டது. மனநலிவு நோய், டவுன் சிணட்;ரோம் என்றும் டிரைசோமி 21 என்றும் அழைக்கப்படுகிறது. மரபியல் கோளாறாக கருதப்படும் இந்த நோய், மரபிழை 21 கூடுதலாக இருப்பதால் உண்டாகிறது. இது குழந்தை வளர்ச்சியை உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கிறது. பிறக்கும் குழந்தைகளில் 1000 அல்லது 1100 இல் ஒன்று மனநலிவால் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
மனநலிவு நோயால் பாதிக்கப்பட்ட இக்குழந்தைகள் பிறக்கும்போதே, எடை குறைவாகவும், உடல் நீளமாகவும் இருக்கும். தலை, காது, வாய் போன்ற உறுப்புகள் வழக்கத்தைவிட சிறிதாக இருக்கும். குழந்தை கருவில் இருக்கும்போது, தாயிடம் மேற்கொள்ளப்படும் சில பரிசோதனைகள் மூலம், மன நலிவுடன் குழந்தைப் பிறப்பதற்கான சாத்தியம் இருப்பது குறித்து கண்டறியலாம். தற்போதுள்ள நவீன மருத்துவ வளர்ச்சியின் மூலம் இந்த நோயை குணப்படுத்த முடியாவிட்டாலும், குழந்தைகளுக்கு உரிய மருத்துவக் கண்காணிப்பை அளிக்க முடியும்.
போதுமான மருத்துவப் பராமரிப்பும், குடும்பத்தின் கவனிப்பும் இக்குழந்தைகளை நீண்ட நாட்களுக்கு வாழவைக்க முடியும். இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள், பொதுப் பள்ளிகளில் படித்து, தங்கள் வாழ்க்கைப் பாதையை நல்லவிதமாக அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.
Add new comment