Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உலக தூக்க நாள் | World Sleep Day | march 18
உலக தூக்க நாள்
கடைசியாக இரவு 9 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது என உங்களுக்கு நினைவிருக்கிறதா? கடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? 8 மணிக்குள் இரவு உணவு முடித்து, 8:30-க்கு வெளிச்சம் அணைத்து, பேசிக்கொண்டே படுக்கையில் விழுந்தால் 9 மணிக்குள் உறங்கிப்போவோம். அது ஒரு காலம். 9 மணித் தூக்கம் 10 மணியாகி, நள்ளிரவாகி, இப்போது அதிகாலை வரை வந்துவிட்டது. அதிகாலை 3 மணி, 4 மணி வரைகூட விழித்திருக்கிறார்கள். இதன் விளைவுதான், இந்த 20 ஆண்டுகளில் புதிது புதிதாகப் பெருகிப் பெருக்கெடுக்கும் நோய்கள். இதில் விழிப்புணர்வு பெற உலக தூக்க நாள் கொண்டாடப்படுகிறது.
உலக தூக்க நாள் (றுழசடன ளுடநநி னுயல) ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு தூக்க மருத்துவத்துக்கான உலக அமைப்பினால் 2008 ஆம் ஆண்டு முதல் நினைவுகூறப்படுகிறது.
ஆரோக்கியமான, சிறந்த தூக்கத்தின் பயன்களைக் கொண்டாடுவதும், தூக்கப் பிரச்சினைகள் மற்றும் அதற்கான மருத்துவம், கல்வி, சமூக நோக்கு ஆகியவற்றை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதும், தூக்கக் கோளாறுகளின் தடுப்பு மற்றும் அவற்றின் மேலாண்மையை ஊக்குவிப்பதும் இந்நிகழ்வின் நோக்கமாகும்.
பிறந்த குழந்தையானது ஏறத்தாழ 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்கலாம். ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகள் 13 மணி நேரம் வரை தூங்க வேண்டும். டீன் ஏஜ் வயதில் இருப்பவர்கள் அதிகபட்சமாக 9 முதல் 11 மணி நேரம் வரையில் உறங்கிக்கொள்ளலாம். இளைஞர்கள் 7 முதல் 9 மணி நேரம் வரையிலும், வயது மூத்தவர்கள் 8 மணி நேர தூக்கத்தையும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது அடிப்படையான விஷயம் என்பதால் அதிகம் உழைப்பவர்கள், நோய்வாய்ப்பட்டு சிகிச்சை எடுப்பவர்கள் மற்றும் நாள்தோறும் மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு உறக்க நேரம் மாறுபடும். பணியின் தன்மைக்கு ஏற்பவும் தூக்க நேரத்தை மாற்றிக்கொள்வது நல்லது.
தூக்கத்தை இரண்டு வகையாகப் பிரிப்பார்கள். முதலில் (சுநுஆ - சுயினை நுலந ஆழஎநஅநவெ) தூங்கும்போது கருவிழி அசைந்துகொண்டே இருப்பது, இரண்டாவது (Nசுநுஆ - ழேnசுயினை நுலந ஆழஎநஅநவெ) தூங்கும்போது கருவிழி அசைவில்லாமல் இருப்பது. என்று பிரிப்பார்கள். இதில் இரண்டாவது வகையே ஆழ்ந்த தூக்கத்தின் வகையைச் சார்ந்தது.
ஆழ்ந்த தூக்கம் ஏற்படுவதற்கு முதலில் சுகாதாரமான தூக்கத்தைப் (ளுடநநி ர்லபநைநெ) பின்பற்ற வேண்டும். அதாவது இரவு 10 மணி முதல் காலை 6 மணி தூங்கவேண்டும். அப்போதுதான் உடலின் இயக்கத்துக்குத் தேவையான நல்ல ஹார்மோன்கள் சுரக்கும். தூங்கும் அறை இருட்டாக இருக்க வேண்டும், தூங்குமிடம் அதிக சத்தத்துடன் இருக்கக் கூடாது. இவையெல்லாம் சுகாதாரமான தூக்கத்துக்குக் காரணியாக இருக்கும். மாலைக்கு மேல் டீ, காபி போன்றவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். இவையெல்லாம் மூளையின் செயல்பாட்டைத் தூண்டி விழிப்புடன் இருக்க வைக்கும். வயிறு நிறைய சாப்பிடக்கூடாது, எளிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். விடுமுறை நாள்களிலும் சரியாக அதே நேரத்துக்குத் தூங்குவதற்குச் சென்றுவிட வேண்டும். தூங்கும் நேரத்தில் கேட்ஜெட்டுகள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
Add new comment