உரையாடலும் ஒத்துழைப்புமே


All religions

உரோமை நகர புனித ஜான் எஜிதியோ பிறன்பு அமைப்பு மான்ட்ரிட் நகரில் அசிசி நகர் புனித பிரான்சிஸ்குவின் சிந்தையில் “எல்லையற்ற அமைதி – உரையாடலில் மதங்களும் கலாச்சாரங்களும்” என்னும் மையக் கருத்தைக் கொண்டு சிந்தித்து பலன்பெற ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் 60 நாடுகளிலிருந்து 300 மேற்பட்ட மதத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அவர்கள் அனைவரும் வருங்கால தலைமுறைமீது அக்கறை கொண்டவர்கள் என்பதனை உறுதிபட கூறினர். இந்த புவிக்கோளம் எல்லோருக்கும் ஏற்புடையதாக அல்லாமல் ஒரு சிலருக்கு மட்டும் ஏற்புடையதாக இருக்கிறது என்பதனைக் குறித்த வருத்தத்தைத் தெரிவித்தனர்.

எனவே இந்த புவிக்கோளம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நாம் தனித்து நின்று தீர்வுகாண இயலாது. உரையாடலாலும் ஒத்துழைப்பாலும் தான் இயலும். கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் இப்புவியைப் பெதுவானதாகத் தான் கருதுவார்கள். எனவே இப்புவியை எல்லாருக்கும் பொதுவானதாக மாற்ற முயலுவோம்.

நாம் என்ன செய்யமுடியும்:

  • மதம் சார்ந்த உணர்வுகளை மதவெறியாக நாம் மாற்றக்கூடாது.
  • பிறருடைய உணர்வுகளையும், சுகந்திரத்தையும் மதிக்கவேண்டும்.
  • மதம் சார்பாக பிரச்சனைகளிலும், வன்முறைகளிலும் ஈடுபடக்கூடாது.
  • நம்முடைய கருத்துகளை மற்றவர்கள் மனதில் திணிக்கக்கூடாது.
  • நம்முடைய விழாக்களின் மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.
  • அவர்களுடைய விழாக்களின் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

உங்களுடைய கருத்துகள் வரவேற்கப்படுகிறது.
 

Add new comment

14 + 3 =