அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God

வாழ்வின் ஊற்றும் ஒளியுமாக இறைவா! 
இப்புதிய நாளின் துவக்கத்திலே, உமது அருள் வேண்டி, காலியாக இருக்கும் எமது பாத்திரத்தை, எம் கையில் ஏந்தி உன் முன் நிற்கிறோம். 

கடந்த வாரம் முழுவதும் நீர் எமக்குத் தேவையான ஆற்றல்,அறிவு, தெளிவு, ஞானம், அன்பு, மகிழ்ச்சி, நற்சுகம், நல்ல வாய்ப்புகள், நல்ல உறவுகள், நற்பண்புகள் ஆகியவற்றால் எமது பாத்திரத்தை நிரப்பி, செவ்வனே  கடந்த வாரத்தை நிறைவான, திருப்தியான உணர்வோடு, கடந்து வர நீர் கிருபை பாராட்டினதற்காய், உமக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறோம். 

இந்நாளில், உமது ஞான ஒளியால் எம் புத்தியை நிரப்பும்.
உமது அன்பை ஊற்றாய் எமது உள்ளத்தில் பாயச்செய்யும். 
இப்புதிய வாரத்தை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம்.
உமது திவ்ய ஒளியால் நிரப்பப்பட்டு, நாங்கள் புத்தி தெளிவுடன், நல்லதையே சிந்திக்க, எங்கள் கண்கள் நன்மையையே காண,ஞான திருஷ்டியை, ஞான ஒளியை எமக்கு அருளும்.

உமது அன்பின் ஊற்று எமது உள்ளத்திற்குள் பெருக்கெடுத்து பாய்வதால், உமது அன்பு, கருணை மற்றும் நற்பண்புகளால் நாங்கள் நிரப்பப்பட்டு,  அன்பான, இனிய, பண்பான சொற்களைப் பேச, கருணை மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் எங்கள் செயல்கள் அமைய எமக்கு உதவி புரியும். 

இந்த நாளில் எங்கள் உடலின் கலைப்பு நீங்க,  நல்ல ஓய்வையும் மனதின் களைப்பு நீங்க, உயரிய சிந்தனைகளையும், 
உள்ளத்தின் காயங்கள் மற்றும்  கசப்புகளை ஆற்ற, அன்பான அனுபவங்களை, எமக்கருள இறைஞ்சுகின்றோம். 

வாழ்க வையகம் வாழ்க வளமுடன். இந்த நாள் நமக்கு இனிதான நாளாக அமைவதாக

Comments

Andradam intha visesamana varthaikalai ketkavum padikavum rombavume amaithiyaga mahilchiyaga ullathu. Ungal pani sirrakka vendugirom. Mikka Nandrigall

Add new comment

2 + 15 =