வெள்ளத்தால் மூழுகும் நகரங்கள் - தவிக்கும் ஈரான் மக்கள்


ஈரானில் வெள்ளப்பெருக்கில் - சிக்கி தவிக்கும் மக்கள்

ஈரான் நாட்டில் கனமழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளத்தினால், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் ஈரான் நாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 1,900 மாதம், சிறு நகரங்கள், கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

தொடர் மழையால் சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் ஆகியவை பலத்த சேதம் அடைந்துள்ளன. இதுவரை இந்த மழை வெள்ளத்தால் சிக்கி 70 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெள்ளத்தில் குஜஸ்தான் மாகாணம் பெரும் சேதத்தை கண்டுள்ளது. சூசன்கெர்டு நகரில் இடைவிடாது பெய்து வரும் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் நேற்றைய தினமே வெளியேற்றப்பட்டனர்.

பாதுகாப்பான இடங்களுக்கு பெண்களும் ,குழந்தைகளும் அழைத்து சென்று தங்கள் வைக்கப்படும் நிலையில்,ஏராளமான ஆண்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

தென்மேற்கு மாகாணங்களில் உள்ள அணைகள் முழு கொள்ளளவ எட்டி விட்டதால்,அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

மேலும் எண்ணை நிறுவனங்கள் அரசுக்கு உதவியாக குழாய்களை பயன்படுத்தி வெள்ள நீரை அகற்றி வருகின்றனர்.இந்நிலையில்,விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் மீட்புப்பணி,நிவாரணப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஷெரீப் கூறுகையில்,'ஈரான் மீது அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் ,நிவாரண உதவிகள் இடையூறாக அமைந்துள்ளன.

மீட்பு ஹெலிகாப்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இது ஒரு வகையான பொருளாதாரம் பயங்கரவாதம்தான் 'என தெரிவித்துள்ளார். எனினும்,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என ஈரான் அரசு வாக்குறுதி அளித்துள்ளது.

Add new comment

2 + 6 =