இந்தோனேசியாவில் 6.1 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம்


Indonesia earthquake spot

இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று காலை 4 . 54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

ஆனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Add new comment

3 + 0 =