பவேரியாவில் தேனீக்களுக்காக ஒரு புதிய சட்டம்


Honey bee in a comb

பிப்ரவரி மாதத்தில் தாவரங்களையும் விலங்கினங்களையும் பாதுகாப்பதற்காக முன்வைக்கப்பட்ட மனு ஒன்று 1.75 மில்லியன் கையெழுத்துக்களுடன் பெரும் வெற்றியை சந்தித்தது.

 20 சதவிகித விவசாய நிலத்தில் இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துதல், 2030க்குள் அதை 30 சதவிகிதமாக மாற்றுதல் ஆகியவற்றை அந்த மனு முன்வைத்தது.

அந்த மனுவுக்கு மக்கள் அளித்த ஆதரவை கண்ட The Greens கட்சி இது உங்கள் வெற்றி என்று ட்வீட்டி, மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.

தேனீக்களை காக்கும் நடவடிக்கைக்காக பவேரியாவின் பத்து சதவிகித புல்வெளிகள் பூந்தோட்டங்கள் ஆக மாற்றப்பட வேண்டும், ஆறுகளும் நீரோடைகளும் பூச்சி மருந்துகள் மற்றும் உரங்களிடமிருந்து காக்கப்பட வேண்டும்.

தேனீக்களை காப்பது தொடர்பான இந்த மனுவை வெகுவாக ஆதரித்துள்ளார் அரசு, அதை வாக்கெடுப்புக்கு விடாமலே நேரடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்க போவதாக பவேரியா பிரீமியர் Markus soder அறிவித்துள்ளார்.

Add new comment

5 + 7 =