பிரான்ஸ் முதியோர் இல்லத்தில் ஐந்து பேர் பலி - காரணம் என்ன


France Ambulance arriving to aged- home

பிரான்சின் Toulouseஇல் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் 82 பேர் தங்கியுள்ள நிலையில், அவர்களில் 19 பேர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 19 பேர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிகிறது.

அந்த முதியோர் இல்லத்தில் 22 பேருக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது.

இரவு உணவுக்குப் பின் பாதிக்கப்பட்ட அந்த 22 பேரில் 5 பேர் இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் உண்ட உணவு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களிடம் அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 உணவுடன் கொடுக்கப்பட்ட  சாலடில் பிரச்சினை இருக்கலாம் என உணவு உண்ட முதியவர்களின் பேத்தி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Add new comment

7 + 5 =