விமானத்தில் பயணித்த தனிஒருவன்


விமானத்தில் பயணித்த அதிஷ்டசாலி

 

188 பேர் பயணம் செய்யக்கூடிய போயிங் 737-800 ரக விமானத்தில் லித்துவேனியா நாட்டை சேர்ந்த ஸ்கிர்மாந்தாஸ் என்ற நபர் தனியாக பயணம் செய்துள்ளார்.

கடந்த மார்ச் 16-ம் தேதியன்று லித்துவேனியா நாட்டின் தலைநகர் வில்னியஸிலிருந்து, இருந்து வடக்கு இத்தாலியில் உள்ள பெர்மாகோ நகரத்திற்கு போயிங் 737-800 ரக விமான பயணம் செய்தது.

இந்தப் பயணத்தின் போது விமான நிறுவனம் ஒன்று ஒட்டுமொத்தமாக ஒப்பந்தம் செய்திருந்தது. இதனால் இத்தாலியில் இருந்து திரும்பி வரும்போது விமானம் காலியாக இருப்பதை தவிர்க்க நிறுவனம் ஒரே ஒரு டிக்கெட்டை மட்டும் விற்பனை செய்துள்ளது.

இந்த டிக்கெட்டை ஸ்கிர்மாந்தாஸ் வாங்கியுள்ளார். இரண்டு மணி நேரத்துக்கும் கூடுதலாக தான் மட்டுமே விமானத்தில் தனியாளாக பயணித்ததை எண்ணி ஆச்சரியம் அடைந்ததாகவும் இது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமேயான அனுபவம் என்று ஸ்கிர்மாந்தாஸ் தெரிவித்துள்ளார்.

Add new comment

16 + 3 =