வெளிநாட்டில் தவித்த தமிழர்கள்- காப்பாற்றிய மனிதம்


துபாயில் பரிதவிக்கும் தமிழர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் உணவு தங்க இருப்பிடம் இல்லாமல் தவித்து வந்த 36 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் மக்கள் பாதை என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், துபாயின் பர்துபாய் பகுதியில் தமிழர்கள் உணவு, தங்குமிடம் மற்றும் வேலை இல்லாமல் சிரமப் படுகிறார்கள் என்பதை அறிந்தோம்.

அங்கு 11 தமிழர்களை கண்டுபிடித்த நிலையில் தோரா, சத்வா உள்ளிட்ட பகுதிகளில் வாழ்வாதாரத்துக்கு ஏங்கி கொண்டிருந்த மொத்தம் 36 பேரை கண்டுபிடித்தோம் ‌.

அவர்களில் 10 பேருக்கு அங்கு வேலை மற்றும் உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் நான்கு நபர்களை திரும்ப அதே நிறுவனங்களில் வேலைக்கு சேர்த்துள்ளனர்.

மற்றவர்கள், தாயகம் செல்வதாகக் கூறிய நிலையில் அவர்களின் விருப்பப்படி தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் பலருக்கு வேலை தரப்படுவதோடு ஊதியமும் ஒழுங்காக தரப்படவில்லை.

படிக்காதவர்கள் சொந்த ஊரில் விவசாயம் அல்லது வேறு ஏதாவது பணிசெய்து கௌரவமாக வாழ்வதே சிறந்தது.

அதைவிட்டு இங்குள்ள போலி நிறுவனங்களில் சிக்க வேண்டாம் என கூறியுள்ளனர்.

Add new comment

10 + 5 =