என்ன நடக்கிறது அமெரிக்காவில்?


an image of USA President Donald Trump

கட்டும் வரை முடக்கம்  முரண்டு பிடிக்கும் டிரம்ப்  

அதன் மோசமான விளைவுகளை அனுபவித்துவரும் மக்கள்-

என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

 

அமெரிக்காவில் அரசு செயல்பாடு பகுதிகளாக  முடக்கம், அந்நாட்டில் மோசமான விளைவுகளைஏற்படுத்தி வருகிறது.

மெக்ஸிகோ எல்லையில் சுவர்கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்துவருகிறது.

எல்லையில் சுவர் கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் வரை அரசாங்க முடக்கம் தொடரும் என டிரம்ப் கூறி உள்ளார்.

 

அரசாங்க துறைகளுக்கு 25 %நிதி முடக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய அதிகாரிகள் மட்டுமே அதுவும் சம்பளம் இன்றி பணியாற்றுவர்.

அமெரிக்காவுக்கு புதிதில்லை என்றபோதும், தற்போது அது 12 நாள்களாகத் தொடர்ந்து வருவது நாட்டில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக ஏறத்தாழ 8 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படாததால், அதன் மோசமான விளைவுகளை அம்மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

அரசாங்கம் செயல்படாமல் இருப்பதன் விளைவாக தாங்கள் மோசமான விளைவுகளை சந்திப்பதாக மக்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள துறைகள்

உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம், வீட்டு வசதி, விவசாயம், வணிகம் உள்ளிட்ட ஒன்பது துறைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

Add new comment

10 + 4 =