தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு


a representative image of expecting rain in Tamil Nadu

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

 

தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வலு வடைந்து கன்னியாகுமரிக்கும் கடலூருக்கும் இடையே நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

 

தென் மாவட்டங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு. மற்ற மாவட்டங்களில், வறண்ட வானிலை நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிஉள்ளது.

தெற்கு அந்தமான் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது தென் கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருப்பதால் கேரளாவில் மழை பெய்கிறது. தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய் யலாம். அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 69.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும்.

தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வலு வடைந்து கன்னியாகுமரிக்கும் கடலூருக்கும் இடையே நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அதனால் எந்த அளவுக்கு மழை இருக்கும். எந்த திசையை நோக்கி காற்றழுத்தம் நகரும் என்பன போன்ற விவரங்கள் வரும் 28-ம் தேதி தெரியவரும்.

வடகிழக்கு பருவ மழை முடியும் காலத்தில் உள்ளது. இயல்பான மழை அளவில், 50 சதவீதம் கூட பெய்யாத நிலையில், ஜனவரி வரை மழை தொடருமா என, வானிலை ஆய்வாளர்களும், பொது மக்களும் எதிர்பார்த்துள்ளனர்.

Add new comment

15 + 4 =