உலகச் செய்த்திகள்


a image expresses the expression of need of fresh air

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான  போராட்டத்தில்  12 பேர் தலை அல்லது நெஞ்சில் சுடப்பட்டது அம்பலம் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தி பலியான 2 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது 

 

தூத்துக்குடியில் கடந்த மே-யில் நடைபெற்ற வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் நடத்தபட்ட போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரில் 12 பேர்களின் தலை, மார்பில் தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. 

இதில் பாதிப்பேருக்கு பின்புறத்திலிருந்து துப்பாக்கித் தோட்டா பாய்ந்ததாக பிரேதப்பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது முன்பு வெளியாகாத தகவல் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இதில் பலியான இளம் வயது, அதாவது 17 வயது ஜெ.ஸ்னோலினின் தலையின் பின்புறமாகப் பாய்ந்த குண்டு அவர் வாய்வழியாக வெளியே வந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.

பொது மக்கள் வன்முறையில் ஈடுபட்டதால் தற்காப்புக்காக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே வழக்கில் திடீர் திருப்பமாக பலியானவர்களுக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேரின் உடலில் தலை அல்லது நெஞ்சுப் பகுதியில் குண்டு பாய்ந்து இருந்ததாகவும், அதில் பாதிக்கு பாதி பேர், பின்னாலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Add new comment

10 + 4 =