Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உலகச் செய்த்திகள்
பெண்களின் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட ஒன்று எட்டு ஒன்று இலவசம் தொலைபேசி சேவையில் அதிகமாக குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் பதியப்பட்டுள்ளன.
பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய 181 இலவச தொலைபேசி சேவை கடந்த 10-ம் தேதி தமிழகத்துக்கு விரிவுபடுத்தப்பட்டது. சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதி யில் 181 இலவச தொலைபேசி எண்ணுக்கான மையம் அமைக்கப் பட்டுள்ளது.
இந்த மையத்தை நிர்வகிக்க 5 வழக்கறிஞர்கள், 5 மனநல ஆலோ சகர்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் பணியமர்த்தப்பட்டுள் ளனர். இந்த மையத்துடன் காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகள், கவுன்சிலிங் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்த சேவை மையம் தொடங்கப் பட்ட முதல் நாளில், 5 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. இதனை தொடர்ந்து, அதற்கு அடுத்த நாட் களில் இருந்து தினமும் 600 முதல் 700 அழைப்புகள் வருகின்றன. கடந்த 20-ம் தேதி வரை 10 நாட் களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.
இவற்றில், அதிகபட்சமாக கண வன் மது அருந்துவிட்டு அடிப்பது, குழந்தைகள், மனைவியுடன் கணவர் நேரம் ஒதுக்குவதில்லை, பெற்றோரை மகன் அல்லது மகள் கவனிப்பதில்லை உட்பட குடும்ப வன்முறையால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாங்கள் சந்திக்கும் பாதிப்புகளை அதிக அளவில் பெண்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதற்கு அடுத்த படியாக, கல்யாணம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிய வாலிபர்களிடம் இருந்து நகை, பணத்தை மீட்டு தர வேண்டும், மாமியார், மருமகள் பிரச்சினை, அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்பான தகவல் களை பெறுவது உள்ளிட்ட அழைப் புகளும் வருகின்றன. அழைப்பு களின் தன்மையை பொறுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக, சமூக நலத் துறை அதிகாரி ஒருவர் கூறியதா வது: குடும்ப வன்முறை காரணமாக அதிகபட்ச அழைப்புகள் வருகின் றன. எங்களிடம் வரும் அழைப்பு களை அவசர உதவி தேவைப்படும் அழைப்புகள், சாதாரண அழைப்பு கள் என்று இரு வகையாக பிரித்து வைத்துள்ளோம். பாலியல் வன் முறை, பெண்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவற்றை அவசர அழைப் பாக கருதி காவல்துறை மூலம் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு வருகிறோம். இவ்வாறு, கடந்த 10 நாட்களில் வந்துள்ள 10 ஆயிரம் அழைப்புகளில் 30 சதவீதம் அவசர அழைப்பாக பதிவு செய்யப்பட் டுள்ளது. அழைப்புகளின் தன் மையை பொறுத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Add new comment