உலகச் செய்த்திகள்


a heavy rain image of Sri Lanka

இலங்கை வடக்கு மாகாணத்தில் வெள்ளம்: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்வு,

சிக்கிக்கொண்ட மீட்பு அதிகாரிகள்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் 2,788 குடும்பங்களை சேர்ந்த 9,161 பேர் பாதிக்கப்படுள்ளனர்.

மேலும், 1,829 குடும்பங்களை சேர்ந்த 5,775 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அடை மழையினால் இலங்கையின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

கடுமையான மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய குளமான இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் சனிக்கிழமை காலை திறந்து விடப்பட்டது. இதனால் தாழ் நிலத்தை நோக்கிய நீர் வரத்து சடுதியாக அதிகரித்தது.

நீர் வரத்து சடுதியாக கூடியதால் கண்டவளை பிரதேச செயலகம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அங்கு கடமையிலிருந்த அரச ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறமுடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் வெள்ளத்தில் சிக்கிய அரச ஊழியர்களை கடற்படையினர், ராணுவத்தினர் மற்றும் பொலிசாரின் உதவியுடன் படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Add new comment

10 + 2 =