Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
திருச்சபை செய்திகள்
ஜப்பானியர்களுக்கு திருப்பீட பல்சமய உரையாடல் அவை வாழ்த்து
அறநெறி விழுமியங்கள் காக்கப்படுவதற்கு, கிறிஸ்தவர்களும், ஷிண்டோ மதத்தவரும் ஒன்றிணைந்து செயல்பட திருப்பீடம் அழைப்பு
1873ம் ஆண்டு முதல், சனவரி முதல் நாளன்று, பெருவிழாவாக ஜப்பானில் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. சனவரி முதல் நாள், புதிய ஆண்டு பிறப்பை, மிக ஆடம்பரமாகச் சிறப்பிக்கும் அனைத்து ஜப்பானிய மக்களுக்கும், குறிப்பாக, ஷிண்டோ மதத்தவருக்கும், தன் சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்து ,செய்தி வெளியிட்டுள்ளது திருப்பீட பல்சமய உரையாடல் அவை.
ஒவ்வோர் ஆண்டும் சனவரி முதல் நாள், ஷிண்டோ ஆலயங்கள் பெருமளவான திருப்பயணிகளையும் பார்வையாளர்களையும் ஈர்க்கின்றன எனவும், இத்தகைய முக்கிய சமய விழாக்கள், அறநெறி விழுமியங்களை மக்கள் வாழ்வில் ஊக்குவிப்பதற்கு எவ்விதத்தில் முயற்சிக்கின்றன என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் திருப்பீடம் அழைப்பு விடுத்துள்ளது.
இன்றைய உலகில், அறநெறி விழுமியங்கள் மதிப்பு குறைந்து, அவை சமுதாயத்தில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், கிறிஸ்தவர்களும், ஷிண்டோ மதத்தவரும் அறநெறி விழுமியங்களை, ஒன்றிணைந்து கட்டியெழுப்புமாறு, திருப்பீட பல்சமய உரையாடல் அவை அழைப்பு விடுத்துள்ளது.
.உலகில் அறநெறி விழுமியங்கள் மதிப்பிழந்து வருவதால், அந்நிலை, மக்கள் வாழ்வில் மதத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து வருகின்றது எனவும், இதனால், கிறிஸ்தவர்களும், ஷிண்டோ மதத்தவரும், அந்த விழுமியங்களை ஒன்றிணைந்து கட்டியெழுப்ப உழைப்பதற்கு, அழைக்கப்படுகின்றனர் எனவும், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் செய்தி கூறுகிறது.
Thanks to Vatican News
Add new comment