ஒரு ஆன்மீக உரையாடல் | Asian Continental Synodal Assembly |Day 2


ஆசியாவின் குரலை உண்மையாக பிரதிபலிக்கும் வகையில் இந்த கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை பயணத்தில் உள்ள அனைத்து பிரதிநிதிகளுக்கும் வழிகாட்டவும், ஊக்கமளிக்கவும் தூய ஆவியானவரின் அருளை தூண்டும் விதத்தில் “அட்சுமஸ் சான்க்டே ஸ்பிரிட்டஸ்” ஆயர்மாமன்றத்தின் செபத்துடன் ஆசிய கண்டங்களின் சபையினுடைய இரண்டாம் நாள் தொடங்கியது. மிகவும் சிறப்புமிக்க வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை செபம், இலத்தீன் மொழியில் தொடக்க வார்த்தையானது, “தூய ஆவியானவரே, நாங்கள் உங்கள் முன்னிலையில் நிற்கிறோம்” என்று பொருள்படும். பல நூற்றாண்டுகளாக இந்த செபமானது பல்வோறு சங்கக் கூட்டங்களிலும், கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை கூட்டங்களிலும் மற்றும் பிற திருச்சபை கூட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. 

அருட்சகோதரி. நத்தாலியா பெக்வார்ட், கூட்டு ஒருங்கியக்கத் திருஅவையின் தலைமைச் செயலகத்தின் துணைச் செயலர், இளைஞர்களுக்கான கூட்டு ஒருங்கியக்கத் திருஅவையாக இந்த திருஅவை செயல்படுகிறது என்று சுட்டிக்காண்பித்து, இன்றைய நாளை ஒருநிலைப்படுத்தினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியது போல், “கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை என்பது இறைவனின் முழுமையான விருப்பப்படி திருச்சபையானது அமைக்கப்பட்டு, தூய ஆவியானவரின் உறுதுணையோடு திருஅவையின் குரலைக் கேட்டு அதை பகுத்தறிந்து ஒன்றாகக் கேட்கும் கூட்டு ஒருங்கியக்கத் திருஅவையே இன்று திருச்சபையக இருக்கிறது. ஒரே கூட்டு ஒருங்கியக்கத் திருச்சபையாக நாம் இணைந்து கடவுளின் குரலுக்கு நாம் செவிகொடுப்போம் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது.” இது நம் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய கொடை மற்றும் பகுத்தறிவது என்பது கூட்டு ஒருங்கியத் திருஅவையின் இதயமாக இருக்க வேண்டும் என்று அருட்சகோதரி. நத்தாலி வலியுறுத்தினார். கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை பயணத்தின் முன்னுதாரணமாகக் கருதப்படும் எம்மாவுஸ்க்குச் செல்லும் பயணத்தை நாம் அனைவரும் இயேசுவின் மாதிரியில் இந்த பயணத்தை தொடர வேண்டும் என்று அழைப்புவிடுத்தார்.

கடந்த இரண்டு நாட்களாக, “ஆன்மீக உரையாடல்” எனப்படும் மூன்று படிமுறையை பயன்படுத்தி இந்த கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை செயல்முறை மூலம் பயணிக்க பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர். 

முதல் படிமுறை: “தளத்தை எடுத்துக்கொள்வது.” அதாவது குழுவில் உள்ள அனைத்து பங்கேற்பாளரும் திருஅவை செயல்முறை அனுபவத்தைப் பற்றி இரண்டு நிமிடங்கள் பேசுவார்கள்;, பிறகு எந்தவொரு விவாதமும், குறுக்கீடும் இல்லாமல் இரண்டு நிமிடங்கள் அமைதிகாத்து பகிர்வினை உள்வாங்குவார்கள். 

இரண்டாம் படிமுறை: “மற்றவர்களுக்கு இடமளித்தல்.” அதாவது குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் மற்றவர்கள் பகிர்ந்ததிலிருந்து தங்களுடைய சிந்தனைகளாக இரண்டு நிமிடம் பகிர்ந்து கொள்ளும் நேரம். அப்போதும் எந்தவொரு விவாதமும், தலையீடும் இல்லாமல் இந்த பகிர்வை உள்வாங்க இரண்டு நிமிடம் கொடுக்கப்பட்டது. 

மூன்றாவது படிமுறை: “ஒன்றாக இணைந்து கட்டியெழுப்புதல்.” அதாவது இந்த உரையாடலின் பலன்களைக் கண்டறிவதற்கான ஒரு நேரமாகும். இங்கு கலந்துரையாடல் சம்மந்தப்பட்ட ஒருங்கிணைப்புகள், பொதுவான கேள்விகள், கருத்துச் சிதறல்கள் மற்றும் மாற்றுச் சிந்தனைகள் எடுத்துரைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. 
இத்தகைய முறையானது, இரக்கத்திற்கான இடத்தை உருவாக்கி நம்மிடையே ஒரு கேள்வியை எழுப்புகிறது: தூய ஆவியானவர் நம்மை எங்கே வழிநடத்திக் கொண்டு செல்கிறார்? 
அனைத்து குழுக்களும் பின்வரும் கேள்விகளை அடிப்படையாக வைத்து செபம் செய்து, தியானித்தனர்: 1. வரைவுத் தாளில் உள்ள “இடைவெளிகள்” என்ற பிரிவில் போதுமான அளவு விவாதிக்கப்பட்டதா? ஏதேனும் பிரச்சனைகள் அல்லது சிக்கல்கள் உள்ளதா? 2. “இடைவெளிகளில்” சேர்க்கப்படக்கூடிய அல்லது மேம்படுத்தக்கூடிய ஆசிய உண்மைகள், அனுபவங்கள் அல்லது கவலைகள் ஏதேனும் உள்ளதா? 

காலையில் நடைபெற்ற இரண்டாவது அமர்வில்;, குழுக்கள் ஆசிய கண்டத்திற்கான ஐந்து மிகப் பெரிய மற்றும் தேவையான முன்னுரிமைகள் பற்றி தியானித்து, விவாதித்தனர். மேலும் இவை வருகின்ற அக்டோபரில் நடைபெறும் கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை சபைக்கு கொண்டு வரப்பட வேண்டும். 
இன்றைய தினத்திற்கான மதிப்பீட்டாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களாக இந்தியாவின் டெல்லி பேராயர். அனில் ஜோசப் தாமஸ் குடோ, திருமதி. கிறிஸ்டினா கெங், ஆயர் குழுமத்தின் முறையியல் ஆணையம் மற்றும் ஆசிய ஆயர்கள் பேரவை கூட்டமைப்பின் (FABC) உறுப்பினர், திருமதி மோமோகோ நிஷிமுரா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். அனைத்து ஆசியாவின் குரலாக பேசுவதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர்களுடைய தனிப்பட்ட திறன் அல்ல என்று அனைத்து பிரதிநிதிகளுக்கும், ஒருங்கிணைப்பாளர்கள் நினைவூட்டினர்.
காலையில் நடைபெற்ற இரண்டு அமர்வுகளும் நற்கருணை ஆசீர்வாதத்திற்கு முன்னரே நேரத்துடன் முடிந்தது. ஏனென்றால் செபம் இந்த கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை கூட்டத்தின் பயணத்திற்கு உந்து சக்தியாக இருக்கிறது. 

இன்றைய மூன்றாவது அமர்வு, பணிபுரியும் ஆவணத்தின் வரைவு கட்டமைப்பை விரிவாக ஆய்வு செய்ய குழுக்களை அழைத்தது. ஆசிய மக்களுக்கான திருப்பலி என்ற கருப்பொருளில் நற்கருணை கொண்டாட்டமானது, கூட்டு ஒருங்கியக்கத் திருஅவையின் உறுப்பினரும், பாகிஸ்தானில் உள்ள கராச்சியின் முன்னாள் பேராயர் கர்தினால் ஜோசப் கவுட்ஸ் தலைமை தாங்கினார். 
லூக் 24:32 – “அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி வழியிலே அவர் நம்முடன் பேசி இறைவார்த்தையை நமக்கு விளக்கங்காட்டியபோது நம்முடைய இதயம் பற்றி எரியவில்லையா,” என்ற இறைவார்த்தையை மேற்கோள்காட்டி அனைத்து பிரதிநிதிகளும் எம்மாவுஸ் சீடர்களைப் போல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி அழைப்புவிடுத்தனர். 

 

Add new comment

3 + 10 =