மெக்சிகோவில் 2.4 மில்லியன் மக்கள் ஜாபோபான் அன்னை மரியாவின் புனித பயணத்தில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர் | வேரித்தாஸ் செய்திகள்


கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்ட பிறகு, மெக்சிகோவின் ஜாலிஸ்கோ மாநிலத்தில் ஜபோபன் அன்னை மரியாவின் புனிதப் பயணம் 2.4 மில்லியன் பக்தர்களை ஈர்த்துள்ளது .

 

இந்த எண்ணிக்கையை மாநில ஆளுநர் என்ரிக் அல்ஃபாரோ உறுதிப்படுத்தினார், அவர் ட்விட்டரில் அதன் 288 ஆண்டு கால அன்னை மரியாவின் புனித பயண  பாரம்பரியத்தில், பங்கேற்பாளர்களின் சாதனை முறியடிக்கப்பட்டது என்று அறிவித்தார்.

 

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் 2018 ஆம் ஆண்டு முதல் ஜபோபனின் அன்னை மரியாவின் புனிதப் பயணம் மனிதகுலத்தின் கலாச்சார பாரம்பரியமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அன்னை மரியாவின் திரு உருவம் குவாடலஜாரா பேராலயத்திலிருந்து ஜபோபனின் பசிலிக்காவிற்கு திருப்பி அனுப்பப்படுகிறது.

 

செப்டம்பர் 15, 1821 இல், அன்னை மரியாவின் இந்த திரு உருவத்திற்கு ட்ரைகரன்ட் இராணுவத்தின் "ஜெனரல்" என்ற கெளரவப் பட்டம் வழங்கப்பட்ட  ஒரு வாரத்திற்குள் ஸ்பெயினில் இருந்து மெக்சிகோவிற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தது .

 

கத்தோலிக்க மதத்திற்க்காகவும், ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகவும் மற்றும் கிளர்ச்சிப் படைகளின் ஒற்றுமை ஆகிய மூன்று உத்தரவாதங்களுக்காகப் போராடியதால், ஜெனரல் அகுஸ்டின் டி இடுர்பைட் தலைமையிலான இராணுவம் "டிரிகாரண்டே" என்று அழைக்கப்பட்டது. ட்ரை-உத்தரவாதக் கொடியின் நிறங்கள் - வெள்ளை, பச்சை மற்றும் சிவப்பு மூன்று உத்தரவாதங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது இன்றுவரை மெக்சிகன் கொடியில் உள்ளது.

 

புனித பயணத்தில்  உச்சக்கட்டமாக அக்டோபர் 12 ஆம் தேதி ஜபோபான் மரியன்னை தேவாலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் குவாடலஜாராவின் பேராயர் கார்டினல் பிரான்சிஸ்கோ ரோபிள்ஸ் ஒர்டேகா, பல பிரிவுகளை கடக்க மெக்சிகன்களை ஊக்குவித்தார், ஏனெனில் "நாங்கள் ஒரே தந்தையின் பிள்ளைகள்.

எங்களிடம் நிறைய வன்முறை அதிக வெறுப்பு, பழிவாங்கல், மற்றும் பிளவுகள் உள்ளன, பல பிரிவுகளுடன் வாழ்வதில் நாங்கள் திருப்தியடையவில்லை, அன்னையின் வழியில் பயணம் செய்வோம் என்று பேராயர் தனது மறையுரையில் கூறினார்.

 

- அருள்பணி. வி. ஜான்சன்

 

News and image courtesy - CNN 

 

 

Add new comment

7 + 3 =