Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஸ்காலாபிரியன்ஸின்- அகதிகள், மாலுமிகள், புலம்பெயர்ந்தவர்களுடன் ஒரு பயணம் | வேரித்தாஸ் செய்திகள் | VeritasTamil
ஜான் பேப்டிஸ்ட் ஸ்காலாபிரினி புனித சார்லஸ் மறைபரப்பு சபையை தோற்றுவித்தவர். இதன் உறுப்பினர்கள் ஸ்காலாபிரினியன்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர். ஆயர் ஸ்காலாபிரினியின் பாத சுவட்டினைப் பின்பற்றி அவர் விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து வருகின்றனர். அக்டோபர் 9ம் தேதி அன்று திருத்தந்தை அவர்களால் புனித பேதுரு சதுக்கத்தில் புனிதராக உயர்த்தப்பட்டார்.
ஸ்காலாபிரினி இவர் பியாசென்சா ஆயராக இருந்தபோது நவம்பர் மாதம் 28ம் தேதி அன்று 1887ம் வருடம் அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக அமெரிக்காவுக்கு அகதிகளாக சென்ற மக்களுக்காக அவர்களின் வாழ்வு மேம்பட ஒரு சபையைத் தோற்றுவித்தார். இரண்டு இத்தாலிய குருக்கள் வார்த்தைப்பாடு எடுத்து சபையின் முதல் உறுப்பினர்களாக சபையின் வளர்ச்சிக்கு வித்திட்டனர். தற்போது சபை 34 நாடுகளில் 700குருக்கள் 400 குருமாணவர்களோடு பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது.
ஆசியாவில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் 1982ம் ஆண்டு கர்தினால் ஜெய்மே சின் அவர்களின் ஒப்புதலோடு சபை விரிவுபடுத்தப்பட்டது. இவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு சேவைகள் ஆற்றி வருகின்றனர். குறிப்பாக புலம் பெயர்ந்தவர்கள், தொழிலாளர்கள்,மாலுமிகள்,மீனவர்கள், கடத்தப்பட்ட மக்கள், மற்றும் அகதிகளுக்கு இவர்களின் சேவை தொடந்து வருகிறது.
1984ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கர்தினால் சின் ஸ்டெல்லா மேரீஸ் என்று பெயரிடப்பட்ட முதல் பணியானது இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பணியானது மாலுமிகள், மீனவர்கள் மற்றும் இவர்களின் குடும்ப நலன் சார்ந்து பணியாற்றி வருகிறது.
1993ம் ஆண்டு ஜீன் 1ம் தேதி அன்று புலம்பெயரும் மக்களின் மையம் தொடங்கப்பட்டு பல நிலைகளில் உள்ள மக்களுக்காக பணியாற்றி வருகிறது.
1984ம் ஆண்டு தொடங்கப்பட்ட அகதிகளுக்கான ஆயர்கள் பேரவையின் பணியானது இந்த சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்றுவரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் 1987ம் ஆண்டு ஸ்காலாபிரினி அகதிகள் மையம் ஆசிய மக்களுக்காக தொடங்கப்பட்ட அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
2022 அக்டோபர் 9ம் தேதி ஸ்காலாபிரினியஸ் சபைக்கு மிகவும் உன்னதமான மற்றும் மறக்க முடியாத நாளாக அமைந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் இவர்கள் ஆற்றுகின்ற பணிக்கு ஓரு ஊக்கம் ஊட்டும் விதமாக தந்தை ஸ்காலாபிரினி புனிதராக உயர்த்தப்பட்ட இந்த நிகழ்வு அனைத்து மக்களுக்கும் குறிப்பாக இந்த சபையின் உறுப்பினர்களுக்கு மாபெரும் கொடையாகும். மேலும் இவர்கள் குறிப்பாக புலம் பெயர்ந்தவர்கள்,தொழிலாளர்கள், மாலுமிகள், மீனவர்கள், கடத்தப்பட்ட மக்கள் மற்றும் அகதிகளுக்கு தங்களது சபையின் சேவை தொடரும் என்று உறுதி அளித்துள்ளனர்.
- அருள்பணி. ஜான்சன் SdC
Add new comment