
1. தீய ஆவிகளை விரட்டும் அருட்தந்தை.
செப்டம்பர் 5ஆம் தேதி கடந்த புதன்கிழமை ஒரு ஆன்லைன் மன்றத்தில், மணிலா உயர்மறைமாவட்டத்தின் தலைமை தீய ஆவிகளை ஓட்டும் அருட்தந்தை, கனவு உலகம் தீமை செழித்து மனித ஆன்மாகளை அழிக்க வழிகளைத் திறந்து விடுகிறது என்று கூறினார்.
ஆசிரியரும் விரிவுரையாளருமான அருட்தந்தை ஜோஸ் பிரான்சிஸ்கோ சிக்வியா, நவீன தொழில்நுட்பங்கள் மீட்பின் நம்பிக்கைக்குரிய கண்டுபிடிப்பு , மேலும் ஆன்மீகம் சார்ந்து இருக்க வேண்டும் ஆனால் இன்று அவை கடவுள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது.
மனிதனை அவனை படைத்த கடவுளிடமிருந்து பிரிக்க தீயவன் கையாளும் ஒரு தந்திரம் இது என்று மணிலா பேராயரும் கூறியுள்ளார்.
உண்மையின் பாதுகாப்பில்" என்ற தலைப்பில் நடந்த ஆன்லைன் மாநாட்டில் பேசிய தந்தை "குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்குள் தீமை மிக நுட்பமான முறையில் ஊடுருவுகிறது" என்பதை கேட்போர் உணரும்படி சிக்வியா வலியுறுத்தினார்.
பல கொடூர செயல்கள் இன்று வலைத்தளங்களில் தான் கொட்டிக்கிடக்குறது "தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான அனைத்தும் தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல" என்று பண்பாட்டிற்கான திருதந்தை மாநாட்டில் 2017 ல் திருதந்தை பிரான்சிஸின் செய்தியை மேற்கோள் காட்டி தந்தை அவர்கள் விளக்கி கூறினார்.
கனவு உலகம் யதார்த்த உலகை விட உண்மையானதாக தோற்றமளிக்கிறது" என்று அருட்தந்தை சைகியா மேலும் கூறினார்.
நமது காலத்தின் மிகப்பெரிய நெருக்கடி, ஊடகங்களின் தலையீடு அதனால் பகுத்தறிய இயலாமை இவற்றால் கொண்டு வரப்படும் ஆலோசனைகளால் மனிதன் ஒரு மாய உலகில் மாட்டிக்கொள்கிறான் என்று அருட்தந்தை விளக்கினார்.
இன்றைய மின்னனு சாதனங்கள் ஒரு நபரை மாற்றப்பட்ட ஒரு மாய நிலைக்கு விழ வைக்கின்றன, இது ஆவி உலகத்திற்கு அழைத்து செல்லும் என்ற உணர்வு இல்லை என்றால், அவரை மனரீதியாகத் தாக்கும் என்பது தான் உண்மை
மனிதன் கைப்பேசி சார்ந்து, அடிமையாகிவிட்டான். மறைந்த ஆப்பிள் கம்ப்யூட்டர் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸை மேற்கோள் காட்டி, அருட்தந்தை . சிக்வியா கூறும்போது , "ஒரு நபரின் வாழ்க்கை இப்போது அவரது பாக்கெட்டில் உள்ளது."என்பது எவ்வளவு உண்மை.
சமூக ஊடகப் பயன்பாடுகள் அனைத்தும் "அடிமையாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை," என்று அவர் மேலும் கூறினார், "மனிதனின் காழ்ப்புணர்ச்சி காரணமாக அடிமையாதல் மிகவும் எளிதாக மாறியது " அல்லது மிகவும் எளிமையாக அவனது பாலியல் ஆசைகள் தேவை அடங்கியது.
எவ்வாறாயினும், இந்த மனித-தொழில்நுட்ப இணைப்பின் முடிவுகள் வருத்தமளிக்கின்றன, "வெறுப்பு, ஆத்திரம், விரக்தி, தனிமை எல்லாவற்றையும் விட தனிமை" அவற்றில் முதன்மையானது.
இவை உண்மையில் 2010-ஆம் ஆண்டு வெளியான இயேசு சபையை சார்ந்த அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் ஷூப்பே எழுதிய "தி டாக்மா ஆஃப் ஹெல்" என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நரக வேதனைகள்.
தொழில்நுட்ப ஆர்வமுள்ள நபர்கள், மொழியியலாளர்கள், உளவியலாளர்கள் மற்றும் "நெட்டிசன்களின் சுயவிவரங்கள், நடத்தை மற்றும் பாதிப்புகள்" ஆகியவற்றைப் படிக்கும் பிற நிபுணர்களுடன் இணைந்து பொருத்தமான வழிமுறைகளை உருவாக்குகிறார்கள்.
சமூக ஊடக உள்ளடக்கங்கள் பெரும்பாலும் மூளையின் மகிழ்ச்சியைத் தூண்டும் "டோபமைன்" எனப்படும் என்சைம் மற்றும் இரத்த ஓட்டத்தில் உள்ள அழுத்த ஹார்மோன் "கார்டிசோல்" ஆகியவற்றின் அளவை உயர்த்த வடிவமைக்கப்பட்ட வழிமுறைகளின் தயாரிப்புகளாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
"ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐ-ஃபோன்களின் வருகை மன்னிக்காத தன்மை, அக்கறையின்மை, ஆக்கிரமிப்பு மற்றும் முரட்டுத்தனம் உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது ."
நாசீசிசம், அத்துடன் தன்னை புரிந்து கொள்ள இயலாமை ஆகியவை அதிகரித்து வருகின்றன, தந்தை. சூக்கியா அதிர்ச்சியான தகவலை முன்வைக்கிறார் 1995 முதல் 2012 வரை பிறந்தவர்களிடையே தனிமை வேகமாக முதலிடத்தில் உள்ளது என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
குறைந்த சுயமதிப்பீடு காரணமாக இப்போது லைக்குகளின் எண்ணிக்கை மற்றும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையால் "மோசமான மற்றும் ஒழுக்கக்கேடான செயல்களை" செய்ய ஆர்வம் அதிகரித்துள்ளது , இதனால் மக்கள் "சொர்க்கத்திற்குள் நுழைவதற்கு காலம் இன்னும் கைக்கூடவில்லை என்று தந்தை சைகியா கூறினார்.
இணையவாசிகள் உண்மையிலேயே தீய இணையதளங்களைத் தவிர்க்குமாறு வலியுறுத்தினார். அமானுஷ்யம் மற்றும் மாந்திரீகத்தை கையாள்பவர்கள். அவர்களிடம் மந்திரங்கள் மற்றும் சாபங்கள் இணைக்கப்பட்டிருக்கலாம், இது கொடூரமான ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் என்று தந்தை சைகியா எச்சரிக்கை விடுத்தார்.
“பிசாசினால் சமூக ஊடகங்கள் மூலம் பேச முடியும். பேயோட்டுவதற்கு முந்தைய மற்றும் உண்மையான சடங்குகளில், இணையவாசிகளுடன் தொடர்புகொள்வதற்கு பிசாசால் எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, ”என்று தந்தை கூறினார்.
மறைந்த பேராயர் ஃபுல்டன் ஷீன் விளக்கியபடி, "பிசாசின் மூன்று அறிகுறிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்" என்று சிக்வியா வலியுறுத்தினார். அந்த அறிகுறிகள் தனிமைப்படுத்தல், ஆத்திரம் மற்றும் மூன்றாவது, "நிர்வாணம்", இது பாலுறவு உலகை சுட்டிக்காட்டுகிறது, மாய உலகம் வரம்புகள் கட்டுப்பாடுகள் இல்லாமல் எல்லாவற்றையும் வழங்குகிறது.
"ஆன்லைன் ஆபாசப் படங்கள் தெளிவாகவும் உண்மையாகவும் மாறுகின்றன, அது பயனர்களின் மனதில் பதிந்துவிடும்" என்று தந்தை மேலும் எச்சரிக்கிறார். மேலும் மோசமான விஷயம் என்னவென்றால், மாய உலகில் உள்ள கொடூரமான பொய்களும் ஏமாற்றங்களும் ஆஃப்லைன் அமைப்புகளில் கசிந்துவிடும்.
அவரது பேச்சின் முடிவில், இந்த சவால்களை எதிர்கொள்ள ஒரு மேய்ப்பு அணுகுமுறையை பரிந்துரைத்தார்.
கத்தோலிக்கக் கோட்பாட்டில் சத்தியத்தை ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் திருஅவையின் அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வருடாந்திர மாநாடுகளில் முதன்மையானது.
இந்த ஆன்லைன் மாநாட்டை ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு – சமூக தொடர்பு அலுவலகம் (FABC-OSC), வெரிடாஸ் ஆசியா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் கம்யூனிகேஷன் (VAISCOM) மற்றும் அவர்களது கூட்டாளிகளான கத்தோலிக்க மீடியா நெட்வொர்க் – பிலிப்பைன்ஸ் மற்றும் மேரி தி குயின் பாரிஷ் (MTQP) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ) Novaliches மறைமாவட்டம்
Add new comment