Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு நாள் | ஜீன் 15
உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு நாள்
உலக சுகாதார நிறுவனம், முதியோரைப் பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்தும்விதமாக ஆண்டுதோறும் ஜூன் 15 ஆம் தேதியை முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
முதியோரை அவமதிப்பதில் பலவகை உண்டு. அவர்கள் மனதளவிலும் பேச்சளவிலும் உடலளவிலும் மற்றும் நிதி சார்ந்த அளவிலும் துன்புறுத்தப்படுவார்கள். முதியோருக்குத் தேவையானவற்றைக் கொடுக்காமல் இருப்பது, அவர்களுக்கான நேரத்தை ஒதுக்காதது போன்றவை முதுமையில் தனிமையை அனுபவிப்பதற்கான காரணங்களில் முக்கியமானவை.
ஹெல்பேஜ் இந்தியா அமைப்பினர் கடந்தாண்டு எடுத்த முதியோர் வன்கொடுமை குறித்த ஆய்வில் மத்திய பிரதேசத்தில் அதிகமான அத்துமீறல்களும் ராஜஸ்தானில் குறைவான அத்துமீறல்களும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில் 31 சதவீதம் முதியோர் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். சென்னையில் 27.56 சதவீதத்தினர் கொடுமைக்கு ஆளாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குடும்ப மானம் கருதி பல முதியவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளியே சொல்வது இல்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
முதியோர் மீதான பார்வையை இளைஞர்கள் மாற்ற வேண்டும். முதியோர் உண்மையான அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அவற்றைக் கொடுக்க இளைஞர்கள் முன் வர வேண்டும். அதற்குமுன் அவை தங்களது கடமை என்பதை உணர வேண்டியது அவசியம்.
முதியோருக்கு என்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு பிரிவு உள்ளது (044 2345 2320). அதிலும் தொடர்பு கொள்ளலாம். உதவி கேட்கும் முதியோரை ரோந்து காவலர்கள் கண்காணிப்பார்கள். அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்.
Add new comment