உலக தடகள நாள் | May 7


        உலக தடகள நாள் முதன்முதலில் 1996 இல் கொண்டாடப்பட்டது. சர்வதேச தடகள மன்ற கூட்டமைப்புகளின் (IAAF) முன்னாள் தலைவரான பிரைபோ நெபிலோ என்பவர் தான் இத்தினத்தை தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
        தடகள விளையாட்டுக்கள் (Athletics) எனப்படுவது ஓடுதல், எறிதல், நடத்தல், தாண்டுதல் போன்ற செயற்திறன்களை உள்ளடக்கிய பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இவ்விளையாட்டுக்கள் மிக எளிமையானவை. விலையுயர்ந்த கருவிகளையோ கட்டமைப்புக்களையோ வேண்டுவதில்லை. எளிதாகவும் மலிவாகவும் இருந்தபோதிலும் மனிதரின் உடல் வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை இவை சோதிக்கின்றன. இது பெரும்பாலும் தனிநபருக்கானப் போட்டியாக உள்ளது.
        ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் இப்போட்டிகள் நடத்தப்படுவது கிமு 776 இல் தொன்மைய ஒலிம்பிக்சு காலத்திலிருந்தே அறியப்படுகிறது. இது ஒலிம்பிக் போட்டிகளிலும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களிலிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன.
        தடகள விளையாட்டுக்கள் சகாராவிலுள்ள பண்டைய எகிப்திய கல்லறைகளில் காணலாம்;. இங்கு எப் சூட் திருவிழாவில் ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்படுவதை வரைந்துள்ளனர். இதேபோன்று கிமு 2250களின் கல்லறைகளில் உயரம் தாண்டும் போட்டிகள் வரையப்பட்டுள்ளன. கிமு 1800 இல் அயர்லாந்தில் நடந்த தொன்மையான கெல்ட்டியத் திருவிழாக்களில் நடந்த இடயில்டெயன் விளையாட்டுக்கள் துவக்ககால விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகும். இது 30 நாட்கள் நடந்தது. இதில் ஓட்டம், கற்கள் விட்டெறிதல் போன்ற போட்டிகள் இடம் பெற்றிருந்தன. கிமு 776 இல் நடந்த முதல் மூல ஒலிம்பிக் நிகழ்வில் இடம் பெற்றிருந்த ஒரே போட்டி அரங்க நீளத்திற்கு நடந்த ஓட்டப் பந்தயம் ஆகும். இது இசுடேடியான் எனப்பட்டது. பின்னர் விட்டெறிதல், தாண்டுதல் போன்ற போட்டிகளுடன் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் கிமு 500களில் பான் எல்லெனிக் விளையாட்டுக்கள் நிறுவப்பட்டன. இங்கிலாந்தில் 17வது நூற்றாண்டில் காட்சுவொல்டு ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்பட்டன. கிபி 1796 இல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டில் முதன்முறையாக மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
        கிபி 1886 இல் துவங்கிய முதல் தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தடகளப் போட்டிகள் இடம் பெற்றன. ஒலிம்பிக் போட்டிகள் விரைவிலேயே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்புமிக்க பல்துறை விளையாட்டுப் போட்டியாக உருவெடுத்தது. 

Add new comment

5 + 6 =