Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இரக்கமுள்ளவர்களாய் இருப்போமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் இரண்டாம் திங்கள்
I: தானி: 9: 4-11
II : திபா 79: 8. 9. 11. 13
III: லூக்: 6: 36-38
இன்றைய இறைவார்த்தை நம்மை இரக்கமுள்ளவர்களாய் வாழ அழைக்கிறது.
அதிலும்சிறப்பாக தந்தையைப் போல இரக்கமுள்ளவர்களாய் வாழும் போதே அவ்விரக்கம் பெறும். இன்றைய முதல் வாசகத்தில் தானியேல் கடவுளிடம் இஸ்ரயேல் மக்களின் பாவங்களை அறிக்கையிட்டு மன்றாடும் போது மன்றாடும் போது "எங்கள் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு." என கடவுளின் இரக்கத்தைப் பறைசாற்றுகிறார். இஸ்ரயேல் மக்கள் வழிதவறிய போதெல்லாம் மன்னித்து ஏற்றுக்கொண்டு மீட்பு வழங்கிய கடவுளின் இரக்கத்தை தானியேலின் வார்த்தைகளில் உணரமுடிகிறது.
நம் ஆண்டவராகிய இயேசு விண்ணகத்தையின் இரக்கத்தின் முகமாய்த் திகழ்ந்தார். இரக்கத்தோடு வாழ நமக்கு அவர் காட்டியவழிமுறைகளே இன்றைய நற்செய்தி வாசகத்தில் தரப்பட்டுள்ளன.
"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதைப் போல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்" என்கிறார் லூக்கா நற்செய்தியாளர். ஆனால் மத்தேயு நற்செய்தியாளரோ "உங்கள் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்" என்கிறார். ஆம். அன்புக்குரியவர்களே எவனொருவன் தன்னிலே நிறைவுள்ளவனாய் இருக்கிறானோ அவன் இரக்கமுள்ளவனாய் இருப்பான்.
இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் போது தன்னிலே இரக்கமுடையவன் பிறரோடும் இரக்கமுள்ளவனாய் இருப்பான்.
தன்னைத் தீர்ப்பிடாதவர் பிறரையும் தீர்ப்பிடார். தன்னைக் கண்டனம் செய்யாதவர் பிறரையும் கண்டனம் செய்வதில்லை. தன்னை மன்னித்து ஏற்றுக்கொள்பவர் பிறரையும் மன்னிப்பார். தான் கொண்டவற்றில் மனநிறைவு உடையவர் பிறர் பொருளை விரும்பமிட்டார். இல்லாதவருக்குக் கொடுப்பதிலே மகிழ்வார். எனவே நாமும் நம் விண்ணகத் தந்தையைப் போல நம்மோடும் பிறரோடும் இரக்கத்தோடு வாழ முயல்வோம்.இரக்கமுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் என்று இயேசு கூறுவதை வாழ்வாக்கி, பிறருக்கு இரக்கம் காட்டி தந்தையிடம் இருந்து இரக்கம் பெற்றுக்கொள்வோம்.
இறைவேண்டல்
இரக்கமுள்ள தந்தையே!
உம் பிள்ளைகள் நாங்கள் உம்மைப் போல இரக்கமுடையவர்களாய் வாழ அருள் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment