உலக அரசு சாரா நிறுவனங்களின் தினம்


உலக அரசு சாரா நிறுவனங்களின் தினம்:
 

அரசு சார்பற்ற அமைப்பு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனம்
(Non-governmental organization NGO) என்பது தனியாரால் அல்லது அரச
பங்களிப்பு அல்லது சார்பற்று சட்டப்படி உருவாக்கப்படுகின்ற
அமைப்புக்களாகும். அரசினால் முழுமையாக அல்லது பகுதியாக
நிதியளிக்கப்படும் அமைப்புக்கள் தங்கள் அரசு சார்பின்மையைக் காத்துக்
கொள்வதற்காக அரசுக்குத் தமது அமைப்பில் எவ்வித உறுப்புரிமையும்
அளிப்பதில்லை. அரசு சாரா அமைப்புகள் தீவிரமாக ஈடுபடுவதை ஊக்குவிக்கவும்
மற்றும் அரசு சாரா அமைப்பு, பொது மற்றும் தனியார் துறைகள் மூன்றும்
ஒன்றிணைந்து செயல்படுவதை ஊக்குவிக்கவும் கடைபிடிக்கப்படுகிறது. பல்வேறு
நாடுகளில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல அரசு சார்பற்ற
அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. உலக அளவில் 40,00,000 அரசு சார்பற்ற
அமைப்புக்கள் இயங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தினம் பால்டிக் கடல் நாடுகளின் கழகத்தினுடைய 9 ஆவது
பால்டிக் கடல் கருத்துகக் ளத்தின் 12 உறுப்பினர் நாடுகளால் அதிகாரப்பூர்வமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டு 2010 இல் அறிவிக்கப்பட்டது. இது 2014 ஆம் ஆண்டு
ஐ.நா. அமைப்பு மற்றும் சர்வதேச அமைப்புகளால் அங்கிரிக்கப்பட்டது. அரசு
சார்பற்ற அமைப்பு என்னும் பெயர் 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள்
அவையின் தோற்றத்துக்குப் பின்னரே பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வந்தது.
ஐக்கிய நாடுகள் அவை ஏட்டடின் அதிகாரம் அத்தியாயம் 10 பிரிவு 71, அரசோ
அல்லது உறுப்பு நாடுகளோ அல்லாத அமைப்புக்கள் ஆலோசனை வழங்கும்
அமைப்புக்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.

Add new comment

11 + 2 =