வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நிலைப்பாடு என்ன?


Vedanthangal Birds Sanctuary, Chennai, Tamilnadu

வேடந்தாங்கல் பறவைகள்  சரணாலயத்தின் பரப்பளவை சுருக்கினால் பல்லுயிர் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு பறவைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்பதால் ஏற்கெனவே எல்லையைக் குறைக்கக் கோரி அனுப்பிய விண்ணப்பத்தை திரும்ப பெற்றது தமிழ்நாடு வனத்துறை.

சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பறவைகளை இயற்கையை நேசிப்பவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் வனத்துறையால் 1936ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தாலுகாவில் அமைந்துள்ள வேடந்தாங்கல் பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 

இது இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது. 

இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வெளிநாட்டிலிருந்து பிற கண்டங்களில் இருந்து 28 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான நிலத்திலும் நீரிலும் வாழும் பறவைகள் வருவதாகவும் தங்கி இனப்பெருக்கம் செய்வதாகவும் ஆவணங்கள் சொல்கின்றன.

சமீப காலத்தில் இதன் எல்லையை சுருக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு வனத்துறை 15/ 12/ 2021ல் இதனை திரும்ப பெற்றது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. 

Add new comment

1 + 0 =