ஒளியைத் தேடி.. | All Souls Days | Fr.Prakash


வாழ்வெனும் பயணம் முடிந்து 
மறு வாழ்வெனும் பயணம் தொடர 
அள்ள குறையாத இன்ப அன்பில்
உற்ற எம்மவரை அழைத்துச் சென்ற இறைவா!

கல்லறையில் இவர்களின் உடல் 
எங்கள் உள்ளங்களில் அவர்களின் நிழல் 
பிரிவில் வாடும் என் குறையை நீக்க 
உந்தன் மீட்பை வரமாய் தந்து 
வான் இல்லத்தில் இவர்களின் 
ஆன்மா என்று எம் கண்ணீரை 
துடைத்துத்திட்ட இறைவா!

அழுகையும் இன்று ஆறுதலானதே 
ஏங்கிய இதயமும் இளைப்பாறுதே
தொழுகிரேன் உந்தன் திருப்பாதமே 
தொடரட்டும் உம் மீட்பின் பயனே!

நினைவாகவே நின்றுவிட்ட 
எம் அன்புக்குரியவரை 
நித்தியத்தில் வென்றுவிட்ட
உன் உன்னத நிழலில் 
நிம்மதியாய் அமர்ந்து 
உன் முகம் பார்த்திட 
மனமிரங்கி மீட்டிடு 
எம் அன்பே இறைவா!

இன்றோ நாளையோ 
இவ்வளவே எம் வாழ்வு 
இன்றும் என்றும் எவ்வளவோ 
உம் ஆசீர்  இருக்கும் இப்பொழுதே 
மன்றாடி வேண்டுகிறேன்
உம் ஒளி இவர்கள் மேல் ஒளிர்வதாக! 

 

எழுத்து: அருள்பணி. பிரகாஷ் SdC

Comments

ஒளியைத் தேடி, மிக்க சிறந்த கருத்துக்கள் நேர்த்தியாக இருந்ததது.

Add new comment

9 + 8 =