Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஏழைகளுக்கு உணவளித்த இளையோர் | Youth
புனித பவுல் ஆலயத்தை சேர்ந்த இளைஞர் அமைப்பினர் கடந்த ஜூலை மாதம் 4 ஆம் தேதி ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.
சென்னை தணிகாசலம் நகர் பங்கு தலமான புனித பவுல் ஆலயத்து இளைஞர் அமைப்பினர், அவர்களின் ஊரை சுற்றயுள்ள பகுதிகளான பெரம்பூர், மூலக்கடை ஆகிய இடங்களில் வசிக்கும் 50 ஏழைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பொட்டலங்களை விநியோகித்தனர். பங்குத்தந்தை அருள்திரு அந்தோணி அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு, பின்னர் இளைஞர் அமைப்பினரால் மக்களுக்கு கொடுக்கப்பட்டன.
உணவினை விநியோகத்தின்போது அனைவரும் முகக்கவசம் அணிந்து கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தனர்.
"பங்குத்தந்தையின் வழிகாட்டுதலாலும் இளைஞர் அமைப்பினரின் உழைப்பாலும் இந்த நிகழ்வு சாத்தியமானது. உணவினை பெற்ற மக்களின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி எங்களுக்கு இன்னும் ஊக்கத்தை தந்தது" என்று புனித பவுல் ஆலயம் இளைஞர் அமைப்பினை சேர்ந்த திரு. ஜெபராஜ் அவர்கள் கூறினார்.
(Thanks : Mr. Jebaraj, St. Paul Church, Thanikachalam Nagar)
Comments
Following Christ path always
Following Christ path always makes them great. GOD BLESS
Add new comment