Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
எனது நாட்டில் அகதிகளை நான் விரும்பவில்லை - மேயர் தஞ்சு ஓஸ்கான் | Turkey
துருக்கியின் வடமேற்கில் ஒரு மேயர் இந்த வாரம் "வெளிநாட்டினரிடம்" நீர் மற்றும் கழிவு சேவைகளுக்கு 10 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அறிவித்தபோது, அவரின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பலரால் பாராட்டப்பட்டன.
எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி (CHP) போலுவின் மேயரான தஞ்சு ஓஸ்கான் பின்னர் அவர் எந்த வெளிநாட்டினரைக் குறிப்பிடுகிறார் என்பதை தெளிவுபடுத்தினார் - தங்களின் நாட்டை அவர்களின் இருப்பிடமாய் கொண்டுள்ள அகதிகளை பற்றியே அவர் பேசியுள்ளார்.
மேலும், "இந்த விருந்தோம்பல் மிக நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். துருக்கி "புலம்பெயர்ந்தோருக்கான ஒரு குப்பை தொட்டியாக மாறியுள்ளது" என்றும் அவர் கூறினார்.
சி.எச்.பி பின்னர் அவரது கருத்துக்களிலிருந்து விலகி, வழக்குரைஞர்கள் விசாரணையைத் தொடங்கினர்.
அகதிகளுக்கான துருக்கியின் அர்ப்பணிப்பு மேற்கு நாடுகளிடமிருந்து, குறிப்பாக அங்காராவுடனான 2016 அகதிகள் ஒப்பந்தத்தால் பாதுகாக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றிருந்தாலும், துருக்கியில் குடியேறியவர்களுக்கு எதிரான விரோதப் போக்கு பெரும்பாலும் நடந்துவருகிறது. சில நேரங்களில் அது வன்முறையில் முடிகிறது.
சமீபத்திய வாரங்களில், துருக்கிய ஊடகங்கள் ஈரானிய எல்லையைத் தாண்டி கிழக்கு துருக்கிக்குள் மலைப் பாதைகளைப் பின்பற்றும் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் படங்களைக் காட்டியுள்ளன.
20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை விலக்கிக் கொண்டதால், தலிபான்களின் முன்னேற்றத்தால் அவர்களின் வெளியேற்றம் தூண்டப்பட்டதாக பலர் கூறினர்.
இந்த புதிய வருகைகள் புலம் பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டியதாகத் தெரிகிறது. ஓஸ்கானின் கருத்துக்கள் மற்றும் பிரபலமான சமூக ஊடக ஹேஷ்டேக்குகளான "எனது நாட்டில் அகதிகளை நான் விரும்பவில்லை" என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் சான்றாகும்.
Add new comment