அடடா - டாவின்சி | Da Vinci


இக்கால ஓவியம் - சிற்பக் கலையில் நாம் அறிய வேண்டிய  பெரும் சாதனைக்கலைஞர்கள் உண்டு. அதில் ஒருவர் டாவின்சி.

டாவின்சி எனக் கூறப்படும் இக்கலைஞரின் முழுப் பெயர் லியானர்டோ டாவின்சி. இவரது காலம் 1452 1519.இவர் இத்தாலி நாட்டில் உள்ள வின்னி கிராமத்தில் பிறந்தவர்.

பொறியியல், கட்டடக்கலை, தாவரவியல், உயிரி யல் எனப் பல்துறை மேதையும் இவரே. மனிதனின் உடற்கூறு பற்றிய மேதை இவர். 1500இல் நவீன ஹெலிகாப்டர் போன்ற பறக்கும் இயந்திரத்தை ஓவியமாய் தீட்டி, வானில் பறக்கும் முயற்சிக்கு ஒரு கற்பனை வடிவம் தந்தவர்.

ஓவியத்தில் இவர் அற்புதத் திறனும், அழியாப் புகழும் பெற்றவர். உலகப் புகழ்பெற்ற இவரின் 'மோனாலிசா' ஓவியம் இன்றளவும் புகழ்ந்து பேசப்படும் அரிய கலைப் படைப்பு. அந்த முகத்தில் தோன்றும் அட்டகாசமான, சோகம் ததும்பிய ஒரு புன்னகை போல், யாராலும் வரைய இயலுமா என்பது கேள்விக்குறியே.

மிகச் சிறந்த ஓவியரான ஆண்ட்ரியா டெல் வெரோ கியோ (Andrea del Verrochio)விடம், தனது எட்டாம் வயதில் பயிற்சி பெற்றவர் இவர். தனது 25ஆம் வயதில் லொரொன்ஸோ டி மெடிசி (Lorenze di medici 1449 - 1492) என்பாரின் அரண்மனை ஓவியராய் மாறினார். பிறகு மிலன் நகர் சென்றார். அங்கு புகழ்பெற்ற குதிரை வீரர் சிலையை உருவாக்கினார். இன்றும், உடல் அமைப்பில் மிகச் சிறந்த படைப்பாக பேசப்படுகிறது. ஆனால் 1500இல் பிரஞ்ச் படையெடுப்பில் இது அழிக்கப்பட்டது. (நெப்போலியன் படை எடுப்பின் போது, பல இத்தாலிய கலைச்செல்வம் அழிக்கப் பட்டது. களவாடப்பட்டு பிரான்ஸ் கொண்டு செல்லப் பட்டது.

இவரது கடைசி விருது The last supper மிகப் புகழ்பெற்ற கலைப்படைப்பு. 1505இல் இவர் முடித்த மோனாலிசாவால் இன்றும் பேசப்படுகிறார். இந்த ஓவியம் லிசா (Lisa Gioconda) என்ற பெண்ணின் படமாகும். இப்பெண்மணி பற்றி 1509க்குப் பின்பு ஏதும் தெரியவில்லை. டாவின்ஸி இவ்வோவியத்தை இறுதிவரை பத்திரப்படுத்தி வைத்தார். பல பறவைகளை ஆய்வு செய்தார். அது பறக்கும் விதம் குறித்து ஆய்வு செய்தார். அதன்மூலமே பல பறக்கும் யந்திரங்களை ஓவிய வடிவில் வடிவமைத்தார். பாராசூட் வடிவமும் ஓவியத்தில் தந்தார். வெளிச்சம், லென்ஸ், நீர் அடியில் சுவாசித்தல், வானியல், என பல்துறை மேதையாகவும் இவர் விளங்கினார்.

Add new comment

7 + 1 =