கடவுளுக்கு பவரே கிடையாதா? | கடவுளும் ஒரு ஜோசியர் தான் 4 | Fr. Rojar | VeritasTamil

 

உலகத்துல நடக்கபோறத கடவுளே நெனச்சாலும் தடுக்க முடியாதுனு சொல்ராங்க. ஒருவேளை இது த திருவிளையாடலோ?? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

 

       கடவுளும் ஒரு ஜோசியர் தான்!!! – 4

                        கடவுளும் சாதாரண ‘ஜோசியக்காருன்னா’, அவருக்கு ‘பவரே’ கிடையாதா?ன்னு நீங்க அதிர்ச்சியடையாதீங்க!!! நான் அப்படி சொல்லலயே? கடவுள் – னாலே, அவரு ‘சக்திமான்’ தானுங்க!!! அப்படின்னா, கடவுள, நான் எதுக்கு ஜோசியர் – ன்னு, சொல்லனும்?

                        ஒரு ஜோசியக்காரன்ட்ட நாம எதுக்கு போறோம்? எதிர்காலத்துல என்ன நடக்கும்னு அவருக்கு ‘கணிக்க’ தெரியும்னு, நம்பிக்கையில போறோம். ஒருவேள பியூச்சர்ல ‘கண்டம்’ இருக்குன்னு சொன்னா, சொல்லவே வேண்டாம். ஏதாவது பரிகாரம் சொல்லுங்கன்னு, முந்திக்கிடுவோம். கரெக்டா? சரி, அத விடுங்க. இப்ப ‘கடவுள’ எதுக்காக ஜோசியக்கார வேலையோட, நான் கோர்த்து விடணும்?

                       கடவுளால, எதிர்காலத்த, ‘கணிக்க’ மட்டுமே முடியும் - ங்கிறது தான், என்னோட வாதம். இத அவரு எப்படி செய்ய முடியுது?ன்னு கேட்டா, என்னோட பதில்: கடவுளுக்கு “நாம மனசுல என்ன “நினைக்கிறோமோ”, அத அறிஞ்சிக்கிற சக்தி இருக்கு”. அத வச்சு தான், அவரு கணிக்கிறாரு’ன்னு சொல்வேன். ஆனா,  நாம “நினைக்கிறதை” தான், அவரால கணிக்க முடியுமே தவிர, அது நடக்குமான்னு, அவருக்கே தெரியாது. (இது என்னடா புதுக்கதை?) ஏன்னா, நினக்கிறத எல்லாத்தையும், நாம செய்றது இல்லையே? செய்யனும்னு நினைக்கிறத கடைசி நிமிடத்துல கூட செய்ய வேண்டாம்னு, விட்டுருவோமே? இது தான் கடவுள், ஒவ்வொரு மனுசனுக்கும் கொடுத்திருக்கிற சுதந்திரம். அவனோட கணக்க, அவனே எழுதுற வரம்.

                       அதனால ‘நடக்கப்போறத’ கடவுளே நினைச்சாலும் மாத்த முடியாது, ஒருவேள, நீங்க நினைக்கலாம். ஏதாவது ஆபத்துன்னா, அவரோட சக்திய வச்சு, தடுக்க முடியாதா?ன்னு. முடியும், ஆனா, பண்ண முடியாதே? (ஐயோ! கொழப்பமா இருக்கே?). அதுதாங்க திருவிளையாடல். அதே மாதிரி, ‘மனுசன்’ மேல, தன்னோட எந்த பவரையும் பயன்படுத்தி, கடவுள் ‘இன்புளுவன்ஸ்’ பண்ணவும் கூடாதே! (ஏங்க அப்புடி?ன்னு, நீங்க பாவமா கேட்கிறீங்க. இல்ல?) அத, இயற்கை நியதின்னு சொன்னாலும் சரி, கடவுள் “கள்ள ஆட்டம்” ஆடுறாருன்னு, நம்ம “பேய்ங்க” கடவுள குத்தம் சொல்லிருமோன்னு, நீங்க நினச்சிகிட்டாலும் சரி.  இது தான் ‘உண்மை’ன்னு, நான் நம்புறேன். இப்ப சொல்லுங்க. உங்க ‘விதிய’ எழுதுறது நீங்களா? கடவுளா?

                          இப்ப ‘பகுத்தறிவோட’ ஒரு கேள்வி கேட்கனுமே? இல்லையென்றால், ‘பெரியாரிஸ்டுகள்’ கோபித்துக் கொள்வார்களே? “வாழ்க்கையில என்ன முடிவு எடுத்தாலும், ‘நா’ தான் பொறுப்புன்னா,  என்ன மயித்துக்கு கடவுள்” வேணும்? (அவனுங்க இப்படித்தாங்க கேட்பானுங்க. தப்பா எடுத்துக்காதீங்க!!!)

                        இதுக்கான பதில, போகப் போக சொல்றேன். ஆனா, இப்ப இன்னொரு ஷாக்கிங் நியுஸ் சொல்றேன், கேளுங்க! நீங்க கோயிலுக்குப் போனாலும் சரி, போகலனாலும் சரி. நீங்க நோ்த்திக்கடன் செஞ்சாலும் சரி, செய்யலனாலும் சரி, முட்டுப்போட்டு நடந்தாலும் சரி, நடக்கலன்னாலும் சரி, மொட்டை அடிச்சாலும் சரி, அடிக்கலன்னாலும் சரி, நீங்க யோக்கியனா இருந்தாலும் சரி, அயோக்கியனா இருந்தாலும் சரி. கேட்டாலும் சரி, கேட்கலன்னாலும் சரி, கடவுள் ஒங்களுக்கு, உதவி செஞ்சுகிட்டு தான் இருந்தாரு, இருக்கிறாரு, இருப்பாரு!!! இதுக்கும் பதில பின்னால சொல்றேன்...(இப்ப ஒரு சின்ன கமொ்சியல் பிரேக். சரியா?)

                      ரெண்டு ஈசியான கேள்வி கேட்குறேன்: பதில் சொல்லுங்க, பார்ப்போம். யூதாஸ், இயேசுவ காட்டிக் கொடுத்தது, கடவுள் எழுதுன விதியா? அல்லது யூதாசே செஞ்ச சதியா? அடுத்த கேள்வி: ‘யூதாசு தான்’, தன்ன காட்டிக்கொடுக்கப் போறான்னு, இயேசு ‘உறுதியா’ தெரிஞ்சிருந்திருப்பாரா? அல்லது ‘யூகிச்சிருப்பாரா?’ அல்லது ‘கணிச்சிருப்பாரா?’ அல்லது வெறுமனே‘சந்தேகப்பட்டிருப்பாரா?’

                      அடேய்! பதில சொல்லிட்டுப் போடான்னு, உங்க ‘மைண்ட் வாய்ஸ்’ கேட்குது. என்ன செய்ய? ஒரு பக்கம் முடிஞ்சுட்டே!!!

Follow Radio Veritas Tamil Service At Facebook: http://youtube.com/VeritasTamil​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​ Website: http://www.RadioVeritasTamil.org​​ Blog: http://tamil.rvasia.org​​ **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.

Add new comment

9 + 0 =