மீண்டும் ஓர் புயலை தாங்க முடியுமா?


Image Courtesy: Google, Puthiyathalaimurai

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக 'நிவர்' புயல் உருவானது. இந்த புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 

கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தெருக்களில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குழந்தைகளும் முதியோரும் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். 

நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில், புதிய புயல் உருவாகும் என்ற தகவலும் வெளியையாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்துவரும் நிலையில், நவம்பர் மாதம் 29  ஆம் தேதி, தென் மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

'நிவர்' புயலின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் மீதும் ஒரு புயலை கூடிய விரைவில் மக்கள் சந்திக்க தயாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

எனினும், எப்போதும் மக்கள் அத்தியாவசிய தேவைகளுடன் எந்த ஒரு சூழ்நிலை மாற்றத்திற்கும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 

Add new comment

3 + 16 =