Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
68 சிறந்த தமிழ் நாவல்கள் 2000-2020 | எழுத்தாளர் சசிதரன் | Readers' Fest 2020
நூல்கள் பட்டியல் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். புத்தகம் வாங்குவதற்கு அடிக்கடி நான் பட்டியல் போடுவேன். போன மாதம் ஒருவர் food court-ல் நான் புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து தமிழில் நீங்க படிச்ச நாவல்களை சொல்லுங்கள் என்றார். அப்போது கீழே உள்ள சில புத்தகங்களில் சிலவற்றை சொன்னேன். வீட்டுக்கு வந்தவுடன் பட்டியலை தயாரிக்க ஆரம்பித்தேன். கதை மாந்தர்கள் கண்முன்னே வந்து சென்றனர். அந்தந்த புத்தகங்களை வாசித்த இடங்களின் ஞாபகமும் வந்தது. கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் படித்த புத்தங்களின் ஞாபகங்களுடன் நேரம் செலவழித்தேன். கீழே கூறியுள்ள அனைத்து புத்தங்களையும் நான் படித்திருக்கிறேன். இரண்டாயிரம் ஆண்டிற்கு பிறகு வெளிவந்த நாவல்களில் எனக்கு பிடித்தவை கீழே:
1) காவல் கோட்டம் - சு. வெங்கடேசன்
2) தாண்டவராயன் கதை - பா. வெங்கடேசன்
3) உப்பு நாய்கள் - லஷ்மி சரவணக்குமார்
4) நீலகண்டம் - சுனீல் கிருஷ்ணன்
5) சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்
6) அஞ்ஞாடி - பூமணி
7) தீம்புனல் - ஜி. கார்ல் மார்க்ஸ்
8) ஆழி சூழல் - ஜோ .டி குருஸ்
9) வேனல் - காலப்பிரியா
10) பருக்கை - வீரபாண்டியன்
11) வலம் - விநாயக முருகன்
12) துறைவன் - கிறிஸ்டோபர் ஆன்றணி
13) ரோல்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன்
14) கீதாரி - கலைச்செல்வி
15) யாமம் - எஸ். ராமகிருஷ்னன்
16) புலிநகக் கொன்றை - பி. ஏ. கிருஷ்ணன்
17) கடல்புரத்தில் - வண்ண நிலவன்
18) கூகை - சோ.தர்மன்
19) சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கௌதமன்
20) செடல் - இமையம்
21) ஆப்பிளுக்கு முன் - சரவன்கார்த்திகேயன்
22) கானகன் - லஷ்மி சரவணக்குமார்
23) கொரில்லா - ஷோபாசக்தி
24) நடுகல் - தீபச்செல்வன்
25) வெட்டுப் புலி - தமிழ்மகன்
26) வேள்பாரி - சு. வெங்கடேசன்
27) மிளிர் கல் - இரா. முருகவேள்
28) காடு - ஜெயமோகன்
29) சுளுந்தீ - முத்துநாகு
30) கங்காபுரம் - வெண்ணிலா
31) பேய்ச்சி - நவீன்
32) ஆறாவடு - சயந்தன்
33) அஞ்சுவண்ணம் தெரு - தோப்பில் முஹம்மது மீரான்
34) விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் - சி. மோகன்
35) அழியாச்சொல் - குட்டி ரேவதி
36) மீன்காரத் தெரு - கீரனுர் ஜாகீர் ராஜா
37) கோட்டை வீடு - ம. கா. முத்துரை
38) கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்
39) மரயானை - சிந்து பொன்ராஜ்
40) வாரணாசி - பா. வெங்கடேசன்
41) பட்டக்காடு - அமலராஜ் பிரான்சிஸ்
42) உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
43) சலூன் - வீரபாண்டியன்
44) ஜெப்னா பேக்கரி - வாசு முருகவேள்
45) காடோடி - நக்கீரன்
46) இச்சா - ஷோபா சக்தி
47) யாமம் - எஸ். ராமகிருஷ்ணன்
48) கெடை காடு - ஏக்நாத்
49) குற்றப்பரம்பரை - வேல ராமமூர்த்தி
50) ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்
51) ஆதிரை - சயந்தன்
52)சக்கை - கலைச்செல்வி
53) பார்த்தீனியம் - தமிழ்நதி
54) ஏதிலி - அ. சி. விஜிதரன்
55) ஏந்திழை - ஆத்மார்த்தி
56) உம்மத் - ஸர்மிளா செய்யத்
57) இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா
58) மலைக்காடு - சீ. முத்துசாமி
59) பேட்டை - தமிழ்ப் பிரபா
60) லாக்கப் - சந்திரகுமார்
61) இரவு - ஜெயமோகன்
62) கொற்கை - ஜோ .டி குருஸ்
63) வெண்முரசு வரிசை நாவல்கள் - ஜெயமோகன்
64) வாழ்க வாழ்க - இமையம்
65) தூர்வை - சோ. தர்மன்
66) ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்
67) பிறகு - பூமணி
68) ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகன்
எனக்கு பிடித்த இன்னும் சில நூல்களின் வெளிவந்த வருடங்கள் தெரியவில்லை அதனால் அவற்றை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை .
இரண்டாயிரம் ஆண்டிற்குப் பிறகு தான் படித்து அனுபவித்த, வாழ்விற்கு பயனுள்ள, 68 நல்ல தமிழ் நாவல்களை தோந்தெடுத்து நமக்காக தந்திருக்கிறார் சசிதரன் அவர்கள். இதன் வரிசை தரவரிசையல்ல, மாறாக இது நூல்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கு மட்டுமே. நன்றி.
சசிதரன்
Add new comment