Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நான் நம்புகிறேன் - your experience will shatter your ego| குழந்தைகள் தின வாழ்த்துகள்
அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! Complete the part of the incompleteness of others with your part of completeness. We have only connected existence. If we don't believe in it, wait, your experience will shatter your ego.
இந்த நாள் நம்முடைய குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்க்கவேண்டிய நாள். நமக்கு நம் பெற்றோர் உருவாக்கிக் கொடுத்த வாய்ப்புகளை அசைபோடவேண்டிய நாள். அதே வேளையில் நம் ஊரில் நம் அருகில் வளர்ந்த எத்தணை பேருக்கு நமக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை என்பதை நினைவுகூற வேண்டிய நாள். நம்முடைய குழந்தைகளுக்கு நாம் சரியான வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோமா என்று சிந்திக்க வேண்டிய நாள்.
பல குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்வதற்கும், தொடக்கக் கல்வியிலேயே வேலைக்கு செல்லவேண்டிய நிலையுள்ள இந்த வேளையில், இதைப் படிக்கின்ற அனைவருக்கும், அப்படிப்பட்ட குழந்தைகளுக்கும் மேலான வாய்ப்புகளும் வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
நம்முடைய கடமை. நம்மால் முடியும் என்று நினைத்தால்! ஒரு ஏழைக்குழந்தையின் கல்விக்கு உதவிசெய்வோம். அவர்களுக்கு உடை எடுத்துக்கொடுப்போம். அவர்களுக்கு இந்த நாட்களிலாவது நல்ல உணவும் அவர்கள் விரும்புகின்ற ஒரு விளையாட்டுப் பொருளும் கிடைக்க வழிசெய்யலாம்.
இன்று இணையவழி கற்றல் நடைபெறுகின்றது. அதற்கான மொபைல் வாங்க இயலாதவர்களுக்கு முடிந்தால் மொபைல் வாங்கிக்கொடுத்து உதவுவோம்.
நான் நம்புகிறேன்: யாருக்கு அதிகம் கொடுக்கப்பட்டிருக்கின்றதோ, அவர்கள் அதிகமாக கொடுக்கப்படாதவர்களுக்கு உதவ வேண்டும். இதுவே கடவுளின் நீதி. அதற்கான நீதி விசாரணையும் உண்டு.
Complete the part of the incompleteness of others with your part of completeness. We have only connected existence. If we don't believe in it, wait, your experience will shatter your ego.
Add new comment