Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
Is God Perfect? - நிறைவற்ற கடவுள்
நியூயார்க் புரூக்லினில் கஸ் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி. அங்கே சில குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். சில குழந்தைகள் எல்லாக் குழந்தைகளையும்போல மற்ற பள்ளிகளுக்கு செல்லும் நலன் பெறுகிறார்கள்.
கஸ் குழந்தைகளுக்காக நிதி திரட்டும் குழுவினருக்கான கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது அங்கு படித்துக்கொண்டிருக்கும் சிறுவனின் தந்தை ஆற்றிய உரை இன்றும் பலருடைய மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.
கேள்வியுடன் தன்னுடைய உரையைத் தொடங்கினார் அவர், கடவுள் அனைத்தையும் சரியானதாக, நிறைவானதாக, முழுமையானதாகப் படைத்தார் எனில், என் மகன் சயாவால் மட்டும் மற்ற குழந்தைகளைப் போல எதையும் புரிந்துகொள்ளமுடியவில்லை, கருத்துகளையும் புள்ளிவிவரங்களையும் நினைவில் கொள்ளமுடியவில்லை. அப்படியென்றால் என்னுடைய மகன் சாயாவிடம் கடவுள் படைத்த நிறைவு, முழுமை எங்கு இருக்கின்றது” என்றார் (Where is the perfection in my son, Shaya? My child cannot understand things as other children do. My child cannot remember facts and figures as other children do. Where is God’s perfection?).
சிறிய மௌனத்திற்குப்பின் அவர் சொன்னார். ஆனால் நான் நம்புகிறேன். கடவுள் என் குழந்தையைப் போன்று ஒரு குழந்தையை இந்த உலகிற்கு கொண்டுவருகின்றபோது, அவர் தேடுகின்ற நிறைவு, முழுமை என்பது நாம் அந்த குழந்தையை எவ்வாறு பாவிக்கின்றது, நிறைவுள்ளவர்களாக, முழுமையடையச் சொய்கின்றோம் என்பதில் இருக்கின்றது என்று சொன்னார்.
ஒரு நிகழ்வையும் பகிர்ந்துகொண்டார். ஒரு முறை நானும் என்னுடைய பையனும் பூங்கா ஒன்றில் நடந்துகொண்டிருந்தோம். அங்கு சிலர் பிள்ளைகள் அடிபந்தாட்டம், அதாவது பேஸ்பால் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அப்பா அவர்கள் என்னையும் விளையாட சேர்த்துக்கொள்வார்கள் என நினைக்கிறீர்களா என்றான்.
அவர்கள் என் மகனை அனுமதிப்பார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அனுமதித்தால் அது என் மகனுக்கு ஒருவகையான இணைப்பை சொந்தத்தைக் கொடுக்கும் என்று நினைத்தேன்.
நான் ஒரு பையனிடம் கேட்டேன். அவன் தன் அணியிலுள்ள மற்ற வீரர்களின் அனுமதிக்காக அவர்களைப் பார்த்தான். யாரும் எதுவும் சொல்லவில்லை. அவனே முடிவுசெய்து சயாவை ஏற்றுக்கொண்டான். அவர்கள் 8 வது ஆட்டத்தில் 6 ரன்கள் பின்தங்கியிருந்தார்கள்.
சயா ஒன்பதாவது ஆட்டத்தில் பேட் செய்வதற்காக அனைத்து உடைகளையும் போட்டு தயார்நிலையிலிருந்தான். இந்த வேளையில் சயாவை இறக்கினால், அவர்கள் அணி தோல்வியைத் தழுவும் என்ற நிலையிருந்தது. ஆனாலும் அவர்கள் பேட்டைக்கூட பிடிக்கத்தெரியாத சயாவை இறக்கினார்கள்.
சயா முதல் பாந்தை தவறவிட்டான். இரண்டாவது பந்தினை சந்திப்பதற்கு ஒரு வீரன் சயாவினுடைய பேட்டைச் சேர்த்துப் பிடித்துச் சந்தித்தான். பந்தினை அடித்தார்கள். பந்தை எடுத்து பந்துவீச்சாளன் சயாவை அவுட் செய்யவில்லை. அவர்கள் சயா ஓடு என்று கத்தினார்கள். 3 இடங்களையும் தாண்டி கிராண்ட் சலாம் முடித்தான்.
கடைசியில், மொத்தமிருந்த 18 வீரர்களும் அவனை தங்கள் தோல்களில் தூக்கிவைத்து ஆரவரித்தார்கள். அந்த நாளில் அந்த 18 பையன்களும் கடவுளின் விரும்பிய நிறைவை முழுமையை அடைந்தார்கள் என்றார்.
ஆக, இவ்வுலகில் நிறைவோடு நாம் படைக்கப்பட்டிருக்கின்றோம். நம்மிடம் நிறைவாய் இருப்பது மற்றவருக்குக் கொடுக்கப்படவில்லை. அதை நிறைவுசெய்வதே நம்முடைய கடமை. அதுதான் கடவுளின் நிறைவு.
Add new comment