பேரின்ப வீட்டில்

அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்

லூக்கா 23-43.

 

சிலுவை மரத்தில் மனந்திரும்பின கள்ளனின் பக்கமாக கவனத்தை திருப்புவோம்.. , அவனுக்கு  முதல் ஜெபமும் முடிவு ஜெபமும் அதுவே. ஆனால் அந்த ஜெபத்தை ஆராய்ந்தால் ஆழ்ந்த   கருத்துக்களை நமக்கு சொல்லும். 

அவன் நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம் என்று தன் தவறுகளை உணர்ந்தான். 

நீ கடவுளுக்கு பயப்படுவது இல்லையா என்று  கேட்கும் அளவுக்கு இறை பயத்தோடு  இருந்தான்.  

இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்று இயேசுவை அறிந்து   ஜெபித்தான். இயேசுவே ஆண்டவர்  என்று அவருடைய  பெயரை அறிக்கையிட்டான்.  

அதற்கு பிறகு நிலைவாழ்வு உண்டு என்ற நம்பிக்கையோடு  “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான். இது சிறு ஜெபம் என்றாலும்  உண்மையிலேயே அழகான ஆழமான ஜெபம்.  

அவனுடைய தவறை ஒப்புக்கொள்ளும் மனம், இயேசுவை அறிந்து கொண்ட தன்மை, அவரை அறிக்கையிட்ட நிலை , நிலை வாழ்வுக்கான அவனது சிறு வேண்டுகோள், இவற்றை பார்த்த இயேசு அந்த நிமிடமே அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்று பதில் கொடுத்தார்.

அவனது ஜெபத்திற்கு.உடனே பதில்  வந்தது. நாமும் பதில் கிடைக்கும் வண்ணம் சிறிதும் சந்தேகமின்றி ஜெபிப்போம். 

 

அன்பு ஆண்டவரே, நீரே ஆண்டவர் என்பதை நாங்கள் நம்புகிறோம். நாங்கள் பாவிகள். எங்களை மன்னித்து உமது அன்பால் எங்களை நிரப்பும். உம் பிள்ளைகளுக்குறிய எல்லா ஆசீர்வாதங்களையும்  எங்களுக்கு தாரும். எங்களை நினைவு கூர்ந்து காத்தருளும். ஆமென்.

Add new comment

2 + 3 =