தூய வழி அவரே

அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்; அது ‘தூய வழி’ என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்; அவ்வழிவரும் பேதையரும் வழி தவறிச் செல்லார்.

எசாயா 35-8.

அந்த வழியை நாம்  எப்படி அறிந்து கொள்ள முடியும்.  

வேலை, தொழில், வியாபாரம், கல்வி, வாழ்க்கை, என அனைத்து தரப்பினருக்கும் ஆழ்மனதில் எழும் கேள்வி, “வழி தெரியவில்லையே?” சிலருக்கு அடுத்த வேளை உணவுக்கு கூட வழி தெரியவில்லையே? என்பது தான்.

ஆனால், நாம் எதற்கும் கலங்கவேண்டாம்,  எல்லா கேள்விக்கும் பதில் தருபவரான ஆண்டவர் இயேசு  நானே வழி . என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை.என்கிறார்.

ஆண்டவருடைய வழி இடுக்கமானது. அந்த வழியில் தொல்லைகள் துன்பங்கள் இருந்தாலும் அது உறுதியான வழி. அது சஞ்சலமிகுந்த இவ்வுலகில் , சமாதானம் தரும் வழி.  அநீதி நிறைந்த உலகில், நீதியுள்ள வழி. 

உண்மையற்ற உலகில், உண்மை வழியில் நம்மை நடத்தும்.   அந்த வழியில் நடக்கிறவர்கள் அறிவிலிகளாய் இருந்தாலும் திசை மாறிப்போவதில்லை. 

ஆண்டவரே வழி நடத்துவார்.  மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் அவருடைய கோலும் தடியும் நம்மை தேற்றும்.  ஆண்டவர் தாமே நம்மை நடத்துவார். வழி காட்டுவார்.

 

ஆண்டவரே , உமக்கு நன்றி. எங்களுக்கு  பாதை காட்டி நாங்கள் செல்ல வேண்டிய வழியில் எங்களை நடத்தும். இருள் சூழ்ந்த இடத்திலும் உம் ஒளியில் நாங்கள் நடக்க அருள் தாரும்.  வாழ வழி தெரியாது தவிக்கும் ஏழைகள், நோயாளிகள், அனாதைகள், கைவிடப்பட்ட வர்கள், சந்தோசத்தை தவற விட்டவர்கள்  அனைவருக்கும் உமது வழியை காட்டி ஆசீர்வதியும்.   ஆமென்.

Add new comment

5 + 3 =