உம்மோடு பேச

என் வாயிற்படியில் நாள்தோறும் விழிப்புள்ளோராய் நின்று, என் கதவு நிலையருகில் காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கின்றோர் நற்பேறு பெற்றோர்!
என்னைத் தேடி அடைவோர் வாழ்வடைவர்; ஆண்டவரின் கருணை அவர்களுக்குக் கிடைக்கும்.

நீதிமொழிகள் 8-34, 35

ஆண்டவர் நம்மோடு பேச ஆயத்தமாயிருக்கிறார்.   நாம் அவர் குரலை  கேட்க   தகுதியுள்ளவர்களாய் இருக்கிறோமா ? சிந்திப்போம்.  அநேகர் ஆலயத்திற்கு வருவார்கள். ஆசீர்வாதமான வார்த்தைகளைக் கேட்க விருப்பப்படுவார்கள். 
ஆண்டவர் பேசும்போது ஆலோசனைகள் மாத்திரமல்ல, சில வேளைகளில் கடிந்துகொள்ளுகிற வார்த்தைகளையுங்கூட பேசுவார். அதையும் ஏற்று கொள்ள வேண்டும் 

"ஆண்டவரே பேசும், அடியேன் கேட்கிறேன்" என்று அவர் குரலை கவனிக்க வேண்டும்.  

மரியாள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வார்த்தைகளை  கேட்டுக் கொண்டிருந்தாள். அதன் மூலம் நல்ல பங்கை பெற்று கொண்டார் என விவிலியம்  சொல்கிறது.

 நாம் ஆவலோடு ஆண்டவர்க்காக காத்திருக்கும் போது, அவர் நம் பக்கமாக திரும்பி நம்மை கனிவாக கண்ணோக்கி, நம்மோடு பேசுவது எத்தனை இனிமையான அனுபவம். அத்தகைய மகிழ்வோடு கேட்ட வார்த்தைகளை மனதில் இருத்தி முப்பதாகவும், அறுபதாகவும், நூறாகவும் பிறருக்கு பலன் தருவோம்.

 

ஆண்டவரே பேசும் உமது பிள்ளை நான் வந்திருக்கிறேன்.  என்னோடு பேசும். என்னோடு தங்கும் இருபுறமும் கருக்கான உம் வார்த்தைகள் என்னை உயிற்பிக்கட்டும்.  என்னை பண்படுத்தும் , பயன்படுத்தும், பயனுள்ள கருவியாக எடுத்து செயல்படுத்தும். உம் அருளை நிறைவாக பொழியும்.  ஆமென்.

Add new comment

2 + 0 =