நம்பிக்கையோடு உறங்க!

நான் அமைதியாய், சமாதானமாய் உறங்க செல்வேன் ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னை பாதுகாப்பாய் தூங்க செய்கின்றீர் /  உறங்க செய்கின்றீர்.  

திருப்பாடல் 4 :8

இறைவனின் பாதுகாப்பில் உறங்க செல்வேன்……

இறை இயேசுவில் அன்புக்குரிய இனிய மக்களே !

என் படுக்கைக்கு செல்லும்முன்,  இறைவன் என்னை பாதுகாப்பார், நாளை மீண்டும் நான் துயில் கொள்வேன். ஆக,  நான் அமைதியாய், சமாதானமாய் உறங்க செல்வேன் என்ற நம்பிக்கையிலே ஒவ்வொரு நாளும் செல்கின்றோம்.  பல நேரங்களில், நம்மில் சிலர் அடுத்தநாள் காலையில் எழுந்து இருப்போமா என்று தெரியாது?..... நேற்று இரவு நல்லாத்தான் பேசிக் கொண்டிருந்தார், காலையில் சந்திப்போம் என்று கூறி உறங்க சென்றவர்தான் எழுந்திருக்கவே இல்லை, இறைவனடி சேர்ந்தார் அல்லது இறந்து போய் விட்டார் என்று மக்கள் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம்.  நேற்று  இருந்தவர்களில் பலர்,  நமது உறவினர்கள் ( தாய்-தந்தை,  கணவன்-மனைவி, தாத்தா-பாட்டி, சித்தப்பா-சித்தி, மாமா-அத்தை, பெரியப்பா-பெரியம்மா, அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை, என்று ) இன்று உயிரோடு இல்லை. ஆனால்  நான், அடுத்த நாள் உயிருடன் இருக்கின்றேன்……. அது எப்படி ?  ஆம்,  என்னை இரவு முழுவதும் பாதுகாத்து, மீண்டும் ஒரு புதிய நாளினை கொடுத்து, மகிழ்ச்சி அடைய  செய்திருக்கின்ற என் இறைவனுக்கு, இயேசுவுக்கு நான் நன்றி சொல்லி இருக்கிறேனா? அவரது புகழைப் பாடி இருக்கின்றேனா? இறைவனின் பிள்ளையாய்    இருக்கின்றேனா? என்று   சிந்தித்திட  இன்றைய திருப்பாடல் 4 :8 நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

இந்த நிமிடம் சொந்தமில்லாத இவ்வுலகில், நான் செய்கின்ற ஒவ்வொரு செயலும் எப்படியாக இருக்கின்றது? என்று நம்மையே சுய-பரிசோதனை செய்ய வேண்டும் என்று திருப்பாடல் கூறுகின்றது……

எனது வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றது. ஆனால் இறைவன் மட்டுமே என்றுமே மாறாத    தெய்வமாக இருக்கின்றார், என்னை அன்பு செய்கின்றார், என்னை பாதுகாக்கின்றார். ஆகவே இறைவனின் பாதுகாப்பில் இருக்கும்போது எனக்கு எந்த பயமும் இல்லை மாறாக அமைதியில், சமாதானத்தில் மகிழ்ச்சியில் நான் உறங்க செல்வேன் என்று நம்மில் எத்தனை நபர்கள் கூற முடிகிறது என்று சிந்தித்து செயல்படக்கூடியவர்களாக  தொடர்ந்து மன்றாடுவோம்.   ஆமென்

அருட்தந்தை அருண் sdc.

ஸ்பெயின்..

Add new comment

15 + 1 =