பரிசுத்தமாய்

நீதியைத் திரித்துவிடாதே. ஒருதலைச்சார்பாகச் செயல்படாதே. கையூட்டு வாங்காதே. ஏனெனில், கையூட்டு ஞானிகளின் கண்களைக் குருடாக்கும், நேர்மையாளரின் வழக்கைப் புரட்டிவிடும்.நீதியை, ஆம், நீதியை மட்டுமே நிலைநிறுத்து. அதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உடைமையாக்கிக் கொள்வாய்.

இணைச் சட்டம் 16-19,20

ஆண்டவர் எவ்வளவு தொலை நோக்கு பார்வையுடையவர். லஞ்சம் வாங்காதீங்க என்று அப்பொழுதே சொல்லியுள்ளார். உண்மையை உண்மையாகவே பேசுங்கள். திரித்து, கூட்டவோ குறைக்கவோ வேண்டாம். ஒரு சார்பாக பேசாதீங்க என்று சொல்கிறார். அப்படி திரித்து பேசினால் நேர்மையானவர்கள் வாழ்வை அது பாதிக்கும்.  செய்யாத தப்புக்கு அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று சொல்கிறார்.

நம் வீடுகளில் மருமகளோ, மாமியாரோ செய்த தவறுகளை எப்படியெல்லாம் திரித்து பேசுகிறோம்.  மருமகள், மருமகன்  செய்வதில் குற்றம் கண்டு அதை திரித்து அவர்கள் நேர்மையை சாகடிக்கிறோம். மகன் மகள் செய்யும் தவறை மூடி மறைத்து அவர்கள் தவறு செய்ய இன்னும் தூண்டுகிறோம்.  நம் காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுக்கிறோம். லஞ்சம் கொடுப்பதினால் தகுதி உள்ளவருக்கு கிடைக்க வேண்டியது பறிக்கப்படுகிறது. ஏனெனில், கையூட்டு ஞானிகளின் கண்களைக் குருடாக்கும்.  

நாம் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ் படிந்து நடந்தால் ஆண்டவர் நமக்கு  கொடுக்கவிருக்கும் நாட்டை உடைமையாக்கிக் கொள்வோம் என ஆண்டவர் கூறுகிறார்.

ஆண்டவர் ஒரு சின்ன காரியத்தில் கூட நாம் வழி மாறி போக கூடாது என்று நினைக்கும் அவருடைய தந்தைக்குறிய அன்பை பாருங்கள்.

 

ஆண்டவரே ,  "நான் பரிசுத்தமாய் இருப்பது போல நீங்களும் பரிசுத்தமாய் இருங்கள்" என்று சொன்னவரே , உமக்கு நன்றி. ஆண்டவரே உம் கிருபை எங்களுக்கு போதும் ஆண்டவரே.  எங்கள் பலவீனத்தில் உமது பலத்தை எங்களுக்கு தாரும்.  நாங்கள் உலக ஆசைகளால் தடுமாறும் நேரங்களில் எங்களை தாங்கி நிறுத்தும். பாவ சார்பு எங்களை அனுகாதபடி காத்தருளும்.  ஆமென்

Add new comment

1 + 0 =