அவர் வழியில்

இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடும் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள். அதனால் நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளும்படி கடந்து சென்றடையும் நாட்டை உடைமையாக்கும் வலிமை பெறுவீர்கள்.

இணைச் சட்டம் 11-8.

ஆண்டவர் அவருடைய கட்டளைகளை கடைப் பிடித்தவர்களை மட்டும் தான் கானான் கொண்டு சேர்த்தார். கானான் நாட்டிற்குக்குள்  சென்று மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்க வேண்டிய

இஸ்ரவேலர்கள் இந்தச் சாபத்தால், வனாந்தரத்தில் ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு மிகக் கடினமான

அலைச்சலும் துன்பமும் மிக்க வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். எகிப்திலிருந்து மோசேயோடு கிளம்பியவர்களில் காலேப், யோசுவா தவிர மற்ற எல்லோரும்  ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்து வழியிலேயே மாண்டனர். அவர்களுடைய பிள்ளைகள் மட்டுமே உள்ளே சென்றனர்.  

இன்றும் ஆண்டவர் நம்மை பார்த்து என் கட்டளைகளை மனதில் வைத்து வாழுங்கள் என்று கூறுகிறார். அப்படி நாம் நடந்தால் நமக்கு விண்ணக கானானினுள் நுழையலாம்  . இப்பொழுது நாம் அனைவரும் அந்த கானானை நோக்கி தான்  பயணம்  செல்கிறோம்  . 

அந்த விண்ணக வாழ்வு நிலையானது. அங்கு பசி, தாகம் இல்லை, சோர்வு, நோயில்லை. எப்பொழுதும் சந்தோசம் . மகிழ்ச்சி, ஆண்டவரின் பிரசன்னம். அதற்கு நம்மை தகுதியாக வேண்டும் என்றால், முதலில் எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை அன்பு செய்ய வேண்டும்.  இரண்டாவது தன்னைத்தான் அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்ய வேண்டும்.

இவை இரண்டையும் செய்தோமென்றால் பாவம் நம்மை விட்டு தூரப்போய்விடும்.  .அதற்கு நம்மை தயார் செய்வோம்.

 

ஆண்டவரே உம்மையே நான் நேசிக்கிறேன்.  உம்மோடு இருக்க ஆசிக்கிறேன் . என் பலவீனங்களை என்னை விட்டு அகற்றும். நான் பாவத்தில் விழாத வண்ணம் என்னை காத்து கொள்ளும். உம் பிள்ளையாக , இன்றைய பாடுகள் நிலையான இன்பத்தை தரும் விண்ணக வீட்டுக்கு செல்லும் படி கற்கள் என்பதை உணர்ந்து வாழ அருள் தாரும். ஆமென்.

Add new comment

4 + 9 =