தீண்டத்தகாதவர்களா இவர்கள்?


முற்காலத்தில், தொழுநோயினால் பாதிக்கப்பட்ட மக்களை சமுதாயத்திலிருந்து தள்ளிவைப்பதுபோல, தற்போது கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களையும், ஒதுக்கிவைக்கும் வழக்கம் வளர்ந்து வருவதாக பிலிப்பைன்ஸ் ஆயர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் துணை ஆயரான ப்ரொடெரிக் பபில்லோ அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டு பின்னர், அக்கிருமியின் தாக்கம் அற்றவர் என்றும் கூறப்பட்டார். இந்த அனுபவத்தைக்கொண்டு, மக்கள் கொரோன நோயினால் அவதிப்பட்டோரை எப்படி பார்க்கிறார்கள் என்பதைப்பற்றி தன கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாடு, ஆசிய பசிபிக் பகுதியில், தொற்றுக்கிருமியின் தாக்கம் கொண்டோர் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.  இந்த தொற்றுக்கிருமியின் தாகித்தில் இருந்து தப்பிக்க அணைத்து மருத்துவ வழிமுறைகளையும் பின்பற்றவேண்டிய அதே வேளையில், இந்த னாய் கிருமியின் தாக்கத்தால் அவதிப்பட்டோரை தீண்டத்தகாதவர்கள் என்று எண்ணி விலக்கிவைப்பது தவறு என்பதை ஆயர் பபில்லோ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலவும் இந்த நோயின் தாக்கம் குறைய, ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை அதவாது துயருறும் அன்னை மரியா திருநாள் வரையில், மக்கள் தினமும், நண்பகலில் பத்துமுறை 'அருள்மிகப் பெற்றவரே' என்ற ஜெபத்தை, அன்னை மரியாவை நோக்கி எழுப்புமாறு அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நாமும் அவர்களோடு இணைந்து நமது நாட்டின் சூழல் சீரடைய அன்னை மரியாவிடம் மன்றாடுவோம்.

Add new comment

13 + 1 =